Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாஸ்ஸாக விற்பனையை தொடங்கிய Moto G54 ஸ்மார்ட்போன்..!| Moto G54 Specifications in Tamil

Priyanka Hochumin Updated:
மாஸ்ஸாக விற்பனையை தொடங்கிய Moto G54 ஸ்மார்ட்போன்..!| Moto G54 Specifications in TamilRepresentative Image.

முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா நிறுவனத்தின் Moto G54 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியா மட்டும் அல்லாது உலக நாடுகளில் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் இந்த போனை வாங்கி பயன் பெறலாம். Moto G54 போனின் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் போன்ற முழு விவரத்தை பார்க்கலாம்.

Moto G54 விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.56-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் மீடியாடெக் டைமென்சிட்டி 7020 ஆக்டா கோர் சிப்செட் கொண்டு இயங்குகிறது. கேமராவைப் பொறுத்த வரையில், 50MP, OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிளைசேஷன் குவாட் பிக்செல் டெக்னாலஜி கொண்டு வருகிறது. அத்துடன் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமராஸ மேக்ரோ விஷன் டெப்த் சென்சாரும் இணைந்து வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 8எம்பி கேமரா செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் இரண்டு வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிண்ட் க்ரீன், பியர்ல் ப்ளூ, மிட்நைட் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷனில் கிடைக்கும். இதில் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,999/-க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.15,999/-க்கும் விற்பனையாகிறது. இருப்பினும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவதன் மூலம் ரூ.1500/- மற்றும் எக்ஸ்சேன்ஞ் செய்வதன் மூலம் கூடுதல் ரூ.1500/- தள்ளுபடி கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்