Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லோ-பட்ஜெட்...ஆனா டாப் ஸ்பெக்ஸ்...Vivo Y17S போன்! | Vivo Y17S Launched in India

Priyanka Hochumin Updated:
லோ-பட்ஜெட்...ஆனா டாப் ஸ்பெக்ஸ்...Vivo Y17S போன்! | Vivo Y17S Launched in IndiaRepresentative Image.

பட்ஜெட் விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் விவோ முதன்மையானது. அந்த வகையில், Vivo Y17S என்னும் புதிய ஸ்மார்ட்போன் தற்போது சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. Vivo Y17S போனின் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் போன்ற முழு விவரத்தை பார்க்கலாம்.

Vivo Y17S விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்யும் 6.56-இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் கொண்டு இயங்குகிறது. மேலும் FunTouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 8எம்பி கேமரா செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் என்னும் சிங்கிள் வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. இதில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் கிடைக்கிறது. இந்திய மதிப்பில் Vivo Y17S ஸ்மார்ட்போன் ரூ.12,999/-க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்