மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 5ஜி ஆனது இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி சிப்செட், P-OLED டிஸ்பிளே போன்ற பல சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 5ஜி போனின் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் போன்ற முழு விவரத்தை பார்க்கலாம்.
Motorola Edge 40 Neo விவரக்குறிப்புகள்
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் Full HD+ pOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் மீடியாடெக் டைமென்சிட்டி 7030 சிப்செட் மூலம் இயங்குகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 கொண்டு அறிமுகமாகியுள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போன் செயல்திறன் மற்றும் அதிவேகத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 32எம்பி கேமரா செட்டப் அளிக்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெமரி கார்டு பயன்படுத்தும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. 5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளது. அதோடு ஐபி68 ரேட்டிங் (IP68 rating), டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் என்னும் கூடுதல் அம்சங்களின் சேவையும் அளிக்கப்பட்டுள்ளது. இது Soothing Sea மற்றும் Caneel Bay ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999/-க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.21,999/-க்கும் விற்பனையாகிறது. இந்த போனின் விற்பனை வரும் செப்டம்பர் 28, 2023 ஆம் தேதி மாலை 7 மணி முதல் தொடங்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…