Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

512ஜிபி ஸ்டோரேஜ்...6.67இன்ச் டிஸ்பிளே...எல்லாம் வெறும் ரூ.20,000/-க்கு! | Oppo A2 Pro Launch Date in India

Priyanka Hochumin Updated:
512ஜிபி ஸ்டோரேஜ்...6.67இன்ச் டிஸ்பிளே...எல்லாம் வெறும் ரூ.20,000/-க்கு! | Oppo A2 Pro Launch Date in IndiaRepresentative Image.

ஓப்போ நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ் Oppo A2 Pro ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oppo A2 Pro போனின் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் போன்ற முழு விவரத்தை பார்க்கலாம்.

Oppo A2 Pro விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் FHD+ AMOLED Cruved டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அத்துடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இது டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் மூலம் இயங்குகிறது. கலர்ஓஎஸ் 13.1 ( ColorOS 13.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) உள்ளிட்டவை கொண்டு வெளியாகியுள்ளது.

கேமராவைப் பொறுத்த வரையில், 64எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு என ஐபி54 சான்றிதழ் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, 802 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. பிளாக், டெசர்ட் பிரவுன், Twilight ஆகிய கலர் ஆப்ஷனில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,820/-க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்