Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

ஒரே கிளிக்கில் தூக்கிடலாம்...Netflix-ன்புது அப்டேட்...இனிமே ஓசில பார்க்க முடியாதா?

Priyanka Hochumin November 21, 2022 & 10:45 [IST]
ஒரே கிளிக்கில் தூக்கிடலாம்...Netflix-ன்புது அப்டேட்...இனிமே ஓசில பார்க்க முடியாதா?Representative Image.

உலகெங்கிலும் உள்ள நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நிறுவனம் ஒரு புது அம்சத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நெட்பிளிக்ஸை ஓசியில் பயன்படுத்துபவர்கள் பெரும் சோகத்தில் இருக்கின்றனர். அப்படி என்ன அம்சம் அது? இதில் என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றன? போன்ற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நமக்கு புடிச்ச படம் அல்லது சீரிஸ், அது எந்த மொழியில் இருந்தாலும் நம்ம கிட்ட நெட்பிளிக்ஸ் இருந்தா தாராளமா பார்க்க முடியும். அதுவும் நம்ப காசு கட்டி பார்க்க வேண்டிய அவசியம் இதுவரை இல்லை. என்ன குடும்பத்துல அல்லது பிரெண்ட்ஸ்-ல ஒருத்தர் கிட்ட இருந்தா போதும். அதை வச்சே இத்தனை வருஷமா காலத்தை ஓட்டிட்டு இருந்தோம். ஆனால் இப்ப அதுக்கு ஒரு செக் வச்சிருக்காங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

நெட்பிளிக்ஸ் செயலுக்கு முறை படி சாந்த கட்டி பயன்படுத்தும் நபர்கள், தங்கள் அக்கவுண்டின் பாஸ்வோர்ட் மூலம் மற்றவர்களுக்கு பகிர முடியும். அதில் தங்களுக்கு விரும்பாத ஒரு சிலரின் பெயரை தன்னுடைய அக்கவுண்டில் இருந்து அகற்றும் வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அம்சத்தை கொண்டு வரப்போவதாக நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகை (அதாவது blog post)  மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த, Netflix இன் அக்கவுண்ட் செட்டிங் (Account Setting ) ஆப்ஷனுக்கு சென்று எந்தெந்த சாதனங்களில் தங்களுடைய அக்கவுண்ட் லாகின் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். அதில் நீங்கள் விரும்பாத சாதனங்களை அகற்றி விடலாம்.  மேலும் வேற எந்தெந்த சாதனத்தில் உங்களின் அக்கவுண்ட் பயன் படுத்தப்படுகிறது என்பதையும் நம்மால் கண்டறிய முடியும். Manage Access and Devices Menu மூலம், பயனர் எங்கு, எப்போது, ​​எந்த சாதனத்தில் Netflix கணக்கை இயக்குகிறார் என்பதைக் கண்டறியலாம்.   

இந்த அம்சம் தற்போது உலகெங்கிலும் உள்ள அனைத்து வெப், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை Netflix உறுதிப்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்