Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வாட்ஸ்ஆப்பில் நியூ கம்பானியன் மோட்...எப்ப கிடைக்கும் தெரியுமா?

Priyanka Hochumin November 15, 2022 & 12:30 [IST]
வாட்ஸ்ஆப்பில் நியூ கம்பானியன் மோட்...எப்ப கிடைக்கும் தெரியுமா?Representative Image.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பீட்டா அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. இது அவர்களின் அக்கவுண்டுடன் மற்றொரு ஸ்மார்ட்போனை இணைக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் தற்போது சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கு வழங்கும் வாய்ப்புள்ளது. இந்த அம்சம் மூலம் பல சாதனங்களில் உங்கள் சேட்களை ஒத்திசைப்பதாகக் (Sync) கூறப்படுகிறது, இருப்பினும் சில அம்சங்கள் துணை பயன்முறையில் (companion mode) இன்னும் கிடைக்கவில்லை.

கூடுதலாக, வாட்ஸ்அப் இயங்குதளமானது ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில் வாட்ஸ்அப்பை இணைக்கும் திறனையும், ஸ்மார்ட்போன்களில் டூ நாட் டிஸ்டர்ப் அம்சத்தையும் சோதித்து வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா டிராக்கர் WABetaInfo இன் அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டு பீட்டா v2.22.24.18 அப்டேட்டிற்கான சமீபத்திய WhatsApp ஆனது ஸ்மார்ட்போன்களுக்கான companion mode-ஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இருக்கும் சாதனங்களை ஒரே நேரத்தில் மற்றொரு ஸ்மார்ட்போனுடன் இணைக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அம்சத்தை அணுக, பயன்பாட்டின் ரெஜிஸ்டிரேஷன் ஷ்கிரீனில் 'Link a device' ஆப்ஷனை சரி பார்க்கலாம். இது தற்போது நான்கு டிவைஸ்களில் சேட்களை ஒத்திசைக்க பயனர்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஏதேனும் செகண்டரி டிவைஸில் பயன்படுத்தினால், உங்கள் தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். இருப்பினும் லைவ் லொகேஷனைப் பார்க்கும் திறன் மற்றும் ஒளிபரப்பு பட்டியல்கள்/ஸ்டிக்கர்களை நிர்வகிக்கும் திறன் இந்த அப்டேட்டில் இன்னும் கிடைக்கவில்லை. இந்த அம்சத்தை எல்லாரும் பயன்படுத்தும் தேதியை மெட்டா இன்னும் அறிவிக்கவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்