Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கம்மியான விலையில் சூப்பரான ஸ்மார்ட்வாட்ச்..! இதுல இருக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டியே இது தான்.. | Noisefit Fuse Smartwatch

Gowthami Subramani Updated:
கம்மியான விலையில் சூப்பரான ஸ்மார்ட்வாட்ச்..! இதுல இருக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டியே இது தான்.. | Noisefit Fuse SmartwatchRepresentative Image.

Noise Fit Fuse ஸ்மார்ட்வாட்ச் ஆனது தற்போது மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு உதவும் வகையில் அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 100-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டுள்ளது. இது Noise Fit App உடன் வேலை செய்கிறது. இந்தப் பதிவில் ஸ்மார்ட்வாட்ச் விலை மற்றும் அம்சங்கள் போன்றவற்றைக் காணலாம்.

Noise Fit Fuse Smartwatch அம்சங்கள்

Metallic finish மற்றும் Textured Strap உடன் இந்த Noise Fit Fuse-ஐக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-ன் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே ஆனது 1.38 இன்ச் உடன் 240 * 240 பிக்சல் Resolution-ஐக் கொண்டுள்ளது. மேலும், இதன் டிஸ்பிளே ஆனது 550 nits அளவு கொண்ட peak brightness-ஐக் கொண்டுள்ளது.

புளுடூத் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம், அழைப்புகளைப் பெறவும், அழைக்கவும் முடியும். மேலும், மொபைல் போன் பயன்படுத்துவது போல அழைப்புப் பதிவுகளை அணுக அனுமதிக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்வாட்சில் 10 அழைப்புகள் வரை சேமிக்கலாம்.

Noise Fit Fuse ஆனது 100-க்கும் அதிகமான Watch faces மற்றும் 100 Sports Modes-களைக் கொண்டுள்ளது. மேலும், இது இதய துடிப்பு சென்சார், SpO2 மானிட்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. இது மன அழுத்தம் மற்றும் பெண் ஆரோக்கிய சுழற்சியைக் கண்காணிக்கும் சாதனமாகவும் செயல்படுகிறது. இதனுடன், தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்புத் தன்மையை உருவாக்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாள்கள் வரை பேட்டரி பேக்கப்-ஐ வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

Noise Fit Fuse விலை

மேலே கூறப்பட்ட ஏராளமான அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ Flipkart மற்றும் gonoise.com போன்ற தளங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இவை ரோஸ் பிங்க், ஜெட் பிளாக், விண்டேஜ் பிரவுன் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்