Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

புது டேப்லெட் வாங்க போறீங்களா? பட்ஜெட் விலையில் பிரீமியம் டேப்லெட் அறிமுகம்.. | Xiaomi Pad 6 Price in India

Nandhinipriya Ganeshan Updated:
புது டேப்லெட் வாங்க போறீங்களா? பட்ஜெட் விலையில் பிரீமியம் டேப்லெட் அறிமுகம்.. | Xiaomi Pad 6 Price in IndiaRepresentative Image.

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் டிவி என பல்வேறு சாதனங்களை அறிமுக செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை காட்டிலும் சியோமி நிறுவனத்தின் சாதனங்கள் பட்ஜெட் விலையில் இருப்பதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட நிறுவனம் சியோமி பேட் 5 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸருடன் வெளியான இந்த டேப்லெட் மலிவான விலையில் நல்ல திறன்வாய்ந்தவையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சியோமி நிறுவனம் மற்றொரு தரமான டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தரமான அம்சங்களுடன் வெளிவரும் சியோமி பேட் 6 டேப்லெட்டின் விலை, வெளியீட்டு தேதி, மற்றும் விவரக்குறிப்புகளை விரிவாக பார்க்கலாம்.

Xiaomi Pad 6 Tablet விவரக்குறிப்புகள்:

11 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே வசதியை கொண்டுள்ள இந்த சியோமி பேட் 6 டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. மேலும், 144 ஹெட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 2880x1880 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் 10, 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது.  

Octa-core Snapdragon 870 பிராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த டேப்லெட்டானது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் +2568ஜிபி ஸ்டோரேஜ் என்ற இரண்டு விதமான வேரியண்ட்களில் வருகிறது. மேலும், ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால், இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உண்டு. 

253.95 உயரம் x 165.00 அகலம் x 6.51மிமீ தடிமன் மற்றும் 490 கிராம் எடையுடைய இந்த டேப்லெட் Android 13 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. இதில் குறிப்பாக டால்பி அட்மோஸ் உடன் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 மைக்ரோபோன்கள் ஆதரவும் உள்ளது. இந்த அட்டகாசமான சியோமி பேட் 6 மாடலின் கேமராக்களை பொறுத்துவரை, பின்புறத்தில் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் 13எம்பி ரியர் கேமராவும், முன்புறத்தில் 8எம்பி செல்பி கேமராவும் உள்ளன. எனவே, இந்த டேப்லெட் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். 

நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வசதிக்காகவே இதில் 8840 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த டேப்லெட்டில் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜின் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி Type-C, Wi-Fi 6, ஜிபிஎஸ், யுஎஸ்பி OTG உள்ளிட்ட இணைப்பு விருப்பங்களும் உள்ளன. ஜூன் 13 ஆம் தேதி இந்தியா முழுவதும் அறிமுகமாகவுள்ள சியோமி பேட் 6 டேப்லெட், அமேசான் மற்றும் எம்ஐ.காம் தளத்தில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்