Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் அம்சங்களுடன் விரைவில் வெளியாக உள்ள Nothing Phone 2..! | Nothing Phone 2 Specifications

Gowthami Subramani Updated:
வேற லெவல் அம்சங்களுடன் விரைவில் வெளியாக உள்ள Nothing Phone 2..! | Nothing Phone 2 SpecificationsRepresentative Image.

Nothing Phone ஆனது வரும் ஜூலை மாதம் அதிகார்ப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என இதன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மொபைல் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Nothing Phone 2 அம்சங்கள்

அட்டகாசமான மாடலில் வெளியாக உள்ள இந்த Nothing Phone 2 மொபைல் ஆனது, 8GB RAM மற்றும் 128GB இன்டர்நெல் மெமரியைக் கொண்டிருக்கிறது. இதன் செயலியானது Qualcomm Snapdragon 8 Gen 1 ஆகும். கேமராவைப் பொறுத்த வரை பின் புறத்தில் மூன்று கேமராவைக் கொண்டுள்ளது. பின்புற கேமரா ஆனது 50 மெகாபிக்சல் + 50 மெகாபிக்சல் + 50 மெகாபிக்சல் என்ற அளவில் உள்ளது. அதே போல, முன்பக்க கேமரா ஆனது, 32 மெகாபிக்சல் அளவைக் கொண்டிருக்கிறது. பேட்டரியைப் பொறுத்த வரை, 4700 mAh பேட்டரி திறனைக் கொண்டிருக்கும். டிஸ்பிளே அளவானது 16.94 செமீ அதாவது 6.67 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் புதுப்பிப்பு வீதம் 1080 * 2400 பிக்சல் அளவாகும். ஆன் ஸ்கிரீன் கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. மேலும், இதன் சிறப்பம்சம் Wireless Charging அம்சம் ஆகும்.

இது போன்ற ஏராளமான அம்சங்களைக் கொண்ட Nothing Phone 2 மொபைல் ஆனது வரும் ஜூலை மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதன் விலை தோராயமாக 39,990 ரூபாயாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்