Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo Pad Air Launch Date: ஸ்லிம் ஷ்கிரீன் டேப்லெட்...ஓப்போ வெளியிட்ட லேட்டஸ்ட் கேஜெட்!

Priyanka Hochumin May 24, 2022 & 16:00 [IST]
Oppo Pad Air Launch Date: ஸ்லிம் ஷ்கிரீன் டேப்லெட்...ஓப்போ வெளியிட்ட லேட்டஸ்ட் கேஜெட்!  Representative Image.

Oppo Pad Air Launch Date: ஓப்போ நிறுவனத்தின் தற்போதைய லேட்டஸ்ட் மாடல் டேப்லெட்டாக Oppo Pad Air அறிமுகமானது. இந்த டேப்லெட் ஒரிஜினல் Oppo Padக்குப் பிறகு தொடரில் இரண்டாவதாக திகழ்கிறது. கூடுதலாக, இந்த Oppo Pad Air உடன் Oppo Enco R இயர்பட்களை சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த Oppo Pad Air மற்றும் Oppo Enco R இரண்டும் Oppo Reno 8 தொடருடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த் இறங்கு கேஜெட்கள் பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

Oppo Pad Air அம்சங்கள் | Oppo Pad Air Specifications

இந்த புதிய ஓப்போ டேப்லெட் Oppo Pad Air 10.36-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆன்ட்ராய்டு 12 ColorOS for Pad உடன் இயங்குகிறது மற்றும் 2000x1200 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 60Hz refresh rate கொண்டுள்ளது. மேலும் 225ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 360 nits வரை பிரகாசம் ஆகியவற்றை டிஸ்பிலே கொண்டுள்ளது. Oppo Pad Air ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC, Adreno 610 GPU மட்டுமல்லாது 6GB வரை LPDDR4x ரேம் மூலம் இயக்கப்படுகிறது. 

நீங்கள் இந்த டேப்லெட்டைப்  பயனப்படுத்தி போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுக்க, Oppo Pad Air f/2.0 லென்ஸுடன் பின்புறத்தில் 8MP கேமரா சென்சாரும், f/2.2 லென்ஸுடன் முன்புறத்தில் 5MP கேமரா சென்சாரும் கொண்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் 128GB வரை UFS 2.2 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. நீங்கள் இன்னும் நீடிக்க விரும்பினால், மைக்ரோ SD கார்டு வழியாக (512GB வரை) நீடிக்கும் ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, தரவு பரிமாற்றத்திற்காக உங்கள் சாதனங்களை இணைக்க அனுமதிக்கும் USB ஆன்-தி-கோ (OTG) ஆதரவும் உள்ளது. 

Oppo Pad Air கொண்டிருக்கும் இணைப்பு விருப்பங்கள் - Wi-Fi 5, Bluetooth v5.1 மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். அடுத்ததாக Accelerometer, Ambient light, Gyroscope மற்றும் a Magnetometer போன்ற சென்சார்கள் போர்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் Oppo Latest Tablet 7100mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. சரவுண்ட் சவுண்ட் அனுபவத்திற்காக டால்பி அட்மோஸால் ஆதரிக்கப்படும் குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இவற்றைத் தவிர, டேப்லெட்டின் அளவு 245.08x154.84x6.94 மிமீ மற்றும் 440 கிராம் எடையுடையது. 

86 இன்ச் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட் டிவி விலை 1 லட்சமா?

இந்த Oppo Latest Tablet மொத்தம் 4 வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. 

4GB + 64GB வேரியண்ட் CNY 1,299 (இந்திய ரூபாயில் ரூ. 15,100/-க்கு) தொடங்குகிறது. 

4GB + 128GB வேரியண்ட் டேப்லெட் CNY 1,499 (இந்திய ரூபாயில் ரூ. 17,500/-க்கு) விற்பனையாகிறது.

6GB + 128GB வேரியண்ட் டேப்லெட் CNY 1,699 (இந்திய ரூபாயில் ரூ. 19,800/-க்கு) முதல் விற்பனைக்கு வருகிறது.

மேலும், வாடிக்கையாளர்கள் கூடுதல் CNY 648 (தோராயமாக ரூ. 7,500) செலுத்தி ஸ்டைலஸ் பேனா மற்றும் கீபோர்டுடன் டேப்லெட்டைத் தொகுக்கலாம்.

Oppo Enco R விவரக்குறிப்புகள் | Oppo Enco R Specifications

Oppo Enco R இயர்பட் 13.4mm டிரைவர்ஸ் மற்றும் புளூடூத் v5.2 இணைப்பைக் கொண்டுள்ளது. இயர்பட்களில் டச் கன்ட்ரோல் ஆதரவும் இடம்பெற்றுள்ளது. இன்னும் அட்டகாசமான அம்சம் என்ன தெரியுமா? நீங்கள் போட்டுக்கொண்ட இரண்டு இயர்பட்களுள் ஒன்றை வெளியே இழுத்து, அதனுடைய பின்பக்கத்தில் இரண்டு முறை தட்டினால் யூசர் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்ட மொபைலில் போட்டோ அல்லது வீடியோ எடுக்கலாம். Oppoவின் என்கோ R மாடலில் IPX4 ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இயர்பட்களில் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) இல்லாவிட்டாலும், செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவுடன் அழைப்பு இரைச்சல் குறைக்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது. 

ஒரே சிங்கள் சார்ஜில் நன்கு மணி நேரம் வரை பயன்படுத்தும் வகையில் 27mAh பேட்டரி, ஒவ்வொரு இயர்பட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இயர்பட்கள் சார்ஜிங் கேஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தனியாக 300mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் மொத்தம் 20 மணிநேர பயன்பாட்டை வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் USB Type-C போர்ட்டுடன் வருகிறது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்