Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கண்ணைக் கவரும் டிசைனில் வெளிவந்த மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்..! | Motorola Edge 40 Specs

Gowthami Subramani Updated:
கண்ணைக் கவரும் டிசைனில் வெளிவந்த மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்..! | Motorola Edge 40 SpecsRepresentative Image.

சமீபத்தில் மோட்டோரோலா, மிக அழகான வடிவமைப்பு கொண்ட டிசைனில் மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அப்படி என்ன கண்ணைக் கவரும் வடிவைப்பு என்று தானே கேட்கிறீர்கள். வடிவமைப்பு மற்றும் இதன் மற்ற அம்சங்களும் அனைவரையும் கவரும் வண்ணமே உள்ளது.

கண்ணைக் கவரும் டிசைனில் வெளிவந்த மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்..! | Motorola Edge 40 SpecsRepresentative Image

Motorola Edge 40 Specifications

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது, 6.65 இன்ச் அளவிலான Full HD டிஸ்பிளேயைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதுப்பிப்பி வீதம் 144 ஹெர்ட்ஸ் ஆகவும், சிறந்த பாதுகாப்பு வசதியையும் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே ஆனது, பயனர்களுக்குத் தனித்துவ அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

கண்ணைக் கவரும் டிசைனில் வெளிவந்த மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்..! | Motorola Edge 40 SpecsRepresentative Image

மேலும், இந்த போன் ஆனது Octo-Core Mediatec Dimensity 8020 செயலியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ப்ராசஸர் ஆனது இயக்குவதற்கு அட்டகாசமானதாக இருக்கும். குறிப்பாக, கேமிங் விளையாடுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது, 8GB / 12 GB RAM மற்றும் 128GB / 256 GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது ஆன்ட்ராய்டு – 14 வசதியுடன் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

கண்ணைக் கவரும் டிசைனில் வெளிவந்த மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்..! | Motorola Edge 40 SpecsRepresentative Image

கேமராவைப் பொறுத்த வரை, ரியர் கேமரா ஆனது டூயல் வசதியுடன் 50MP Primary Camera மற்றும் 13MP Ultra wide lens அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம், புகைப்படங்கள் மிக அருமையாக இருக்கும். மேலும், முன் பக்க கேமரா ஆனது, 32MP கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரியானது 4600mAh அளவைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மொபைலின் சிறப்பம்சமாக அனைவரும் விரும்பும் In-Display Fingerprint Scan வசதியைக் கொண்டுள்ளது. மேலும், இந்தப் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஆனது Stero Speakers, Dolby Atmos, 3 Microphones போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்