Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Realme 10 Series Launch Date in India: நெக்ஸ்ட் வீக் வரப்போகும் போன்...இப்ப வந்த லேட்டஸ்ட் அப்டேட்! வேற வாங்க தோணுமா?

Priyanka Hochumin October 18, 2022 & 13:40 [IST]
Realme 10 Series Launch Date in India: நெக்ஸ்ட் வீக் வரப்போகும் போன்...இப்ப வந்த லேட்டஸ்ட் அப்டேட்! வேற வாங்க தோணுமா?Representative Image.

Realme 10 Series Launch Date in India: அடுத்தடுத்து வெளியிடும் அப்டேட்களில் மக்களை பரபரப்பாகவே வச்சிருக்காங்க ரியல்மி நிறுவனம். நாம ரொம்ப நாளா காத்திட்டு இருக்கும் Realme 10 சீரிஸ் அடுத்த வாரம், அதாவது தீபாவளி சமயத்தில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த 10 சீரிஸ் இல் Realme 10 மற்றும் Realme 10+ Pro ஆகிய இரண்டு மாடல்களும் அடங்கும்.

இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்திய BIS சான்றிதழ் வாங்கியுள்ளது. இந்த சான்றிதழ் வாங்கியதால் ஸ்மார்ட்போனைப் பற்றிய அனைத்து விவரங்களும் வெளியாகாது. இருப்பினும் டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை தெரிவித்துள்ளார்.

Realme 10 Series Launch Date in India: நெக்ஸ்ட் வீக் வரப்போகும் போன்...இப்ப வந்த லேட்டஸ்ட் அப்டேட்! வேற வாங்க தோணுமா?Representative Image

முதல்ல Realme 10...

பேஸ் மாடலான ரியல்மி 10 ரஷ் பிளாக் மற்றும் க்ளாஷ் ஒயிட் என்னும் இரண்டு கலர் ஆப்ஷன்ல வருதாம். நாம முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் போனுடைய ஸ்டோரேஜ். இந்த மாடல் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த மாடல் வாங்குற மாறி இருந்தா 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ரெண்டுல ஒன்ன தேர்ந்தெடுத்துக்கலாம்.

வெளியான கூடுதல் தகவல்கள், கடந்த மாதம் Geekbench தரப்படுத்தல் வலைத்தளத்தில் ரியல்மி 10 தென்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவல்படி, MediaTek Helio G99 சிப் மூலம் இயக்கப்படலாம். மேலும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரி கொண்டு இருக்கலாம் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Realme 10 Series Launch Date in India: நெக்ஸ்ட் வீக் வரப்போகும் போன்...இப்ப வந்த லேட்டஸ்ட் அப்டேட்! வேற வாங்க தோணுமா?Representative Image

அடுத்து Realme 10+ Pro...

நெக்ஸ்ட் ஆவலாக எதிர்பாத்து கொண்டிருக்கும் ரியல்மி 10 பிளஸ் ப்ரோ மாடல். இது நெபுலா ப்ளூ, டார்க் மேட்டர் மற்றும் ஹைப்பர்ஸ்பேஸ் ஆகிய கலர் ஆப்ஷன்ல வரலாம். அதே போல் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் 8Gb ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8Gb ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வரும். மேலும் இது MediaTek Dimensity 1080 சிப்செட் மற்றும் மாடல் நம்பர் RMX3686 கொண்டுள்ளது. இது AMOLED டிஸ்பிளே, உயர் தெளிவுத்திறன் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா, OIS மற்றும் 60-65W வேகமான சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்