Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Xiomi Mix Fold 3 மொபைல்ல இருக்க மெயின் ஸ்பெஷாலிட்டியே இது தான்..! | Xiaomi Mix Fold 3 Specs

Gowthami Subramani Updated:
Xiomi Mix Fold 3 மொபைல்ல இருக்க மெயின் ஸ்பெஷாலிட்டியே இது தான்..! | Xiaomi Mix Fold 3 SpecsRepresentative Image.

பல்வேறு முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், சந்தைக்கு ஏற்றவாறு புதுவித அமைப்புகளுடன் மொபைல்களை ரிலீஸ் செய்து வருகின்றன. அந்த வகையில் Fold மொபைல்களும் அடங்கும். Xiaomi நிறுவனம் Fold மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் படி, Xiaomi Mix Fold 1 மற்றும் Xiaomi Mix Fold 2 மொபைல்கள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, Xiaomi Mix Fold 3 மொபைலை Xiaomi நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

Xiaomi Mix Fold 3 வெளியிடப்படும் தேதி

Xiaomi நிறுவனம் Xiaomi Mix Fold 3 மொபைல் அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இதன் முந்தைய பிராண்டுகளான Xiaomi Mix Fold 1 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், Xiaomi Mix Fold 2 ஆனது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் வெளியானது. அதன் படி, புதிதாக வெளியிட உள்ள Xiaomi Mix Fold 3 மொபைல் 2023 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

Xiaomi Mix Fold 3 அம்சங்கள்

Xiaomi-ன் புதிய மாடலான Xiaomi Mix Fold 3 மொபைல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த மொபைலின் அம்சங்கள் குறித்த வதந்திகள் தெளிவற்றதாக வெளிவந்துள்ளது.

Xiaomi Mix Fold 3 மொபைல் டிஸ்பிளேயைப் பொறுத்த வரை, ஒன்றுக்கு மேற்பட்ட பேனல்களைக் கொண்டிருக்கும். மேலும், இது 8.01 இன்ச் OLED டிஸ்பிளே உடன், 20:9 புதுப்பிப்பு விகிதத்தில் காணப்படுகிறது.

கேமராவைப் பொறுத்த வரை, இது மெயின் ஃபோல்ட் அவுட் பேனலில் Under Display Camera-வைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தெளிவான மற்றும் தடையற்ற காட்சியைத் தருவதாக அமையும். அதே சமயம், செல்ஃபி எடுக்கும் போது போன் டேப்லெட் பயன்முறையில் இருக்கும். பல்வேறு கூற்றுக்களின் படி, இந்த மொபைல் ஐந்து மடங்கு Optical Zoom-ஐ வழங்குவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பேட்டரியைப் பொறுத்து, Xiaomi Mix Fold 3 மொபைல் 5020 mAh திறனைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த மொபைல் அம்சங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் தெளிவற்றதாகும். உண்மைத் தகவல்கள், Xiaomi Mix Fold 3 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்