Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரியல்மீயில் புதிய ஸ்மார்ட்ஃபோன் அதுவும் அசத்தலான அம்சங்களுடன்... அதிக பணம் செலவழிக்காமல் தரமான ஸ்மார்ட்ஃபோன் வாங்கணுமா?

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 11:53 [IST]
ரியல்மீயில் புதிய ஸ்மார்ட்ஃபோன் அதுவும் அசத்தலான அம்சங்களுடன்... அதிக பணம் செலவழிக்காமல் தரமான ஸ்மார்ட்ஃபோன் வாங்கணுமா?Representative Image.

ரொம்ப நாள் காத்திருப்புக்கு பிறகு ரியல்மீயில் புதிய ஸ்மார்ட்ஃபோன் வந்துவிட்டது. அதாவது ரியல்மீ -யில் GT Neo 4 என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. REALME GT Neo 4 வருகின்ற டிசம்பர் 31, 2022 அன்று ஜப்பானில் வெளியிடப்படும் என ஊகிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு புது ஃபோன் வந்துவிட்டாலே நமக்கு அதோடு அம்சங்கள், விலை, மற்றும் ஆன்லைனில் எப்படி வாங்குவது என்று தான் முதலில் தேடுவோம். வாங்க, இந்த ஃபோனை பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்வோம். 

இந்த ஸ்மார்ட்ஃபோன் பல சிறந்த அம்சங்களுடன் வருவது மட்டுமல்லாமல், மலிவு விலையிலும் கிடைக்கிறது. நீங்க இந்த போனை ஆன்லைனில் அல்லது இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் வாங்கிக்கொள்ளலாம். அதன்படி, இந்தியாவில் REALME GT Neo 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,192 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வண்ண விருப்பங்களை பொறுத்தவரை, REALME GT Neo 4 ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் வருகிறது. 

பல கண்கவரும் அம்சங்களுடன் வரும் ரியல்மீ ஜிடி நியோ 4 ஸ்மார்ட்ஃபோனில் HD + 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.62-இன்ச் (16.81 செமீ) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.  எனவே கேம் விளையாடும் போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது உங்களுக்கு அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும். மேலும், இந்த ஃபோன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 

மேலும், வரவிருக்கும் REALME ஸ்மார்ட்போனில் 64MP + 8MP + 2MP தீர்மானம் கொண்ட ஒரு பின்புற கேமரா இருக்கும். பின்புற கேமரா அமைப்பு அம்சங்களில் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃபிளாஷ், முகம் கண்டறிதல் (face detection) ஆகியவை அடங்கும். அதுவே முன்பக்க கேமரா 16 MP தீர்மானத்துடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. ஃபின்கர் பிரிண்ட் சென்ஸாரும் உள்ளது. பேட்டரி 5000 mAh.

இந்த மொபைல் சிறந்த செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இது ஸ்டைலானதாகவும் மலிவு விலையிலும் உள்ளது, அதிக பணம் செலவழிக்காமல் தரமான ஸ்மார்ட்ஃபோனை வாங்க விரும்பும் எவருக்கும் இது சிறந்த தேர்வாக அமையும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்