Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

How to - பென்ஷன் வாங்கும் மூத்த குடிகளுக்கு…ஒரு குட் நியூஸ்…Digilockerல் புது அப்டேட்!

Priyanka Hochumin October 25, 2022 & 17:00 [IST]
How to - பென்ஷன் வாங்கும் மூத்த குடிகளுக்கு…ஒரு குட் நியூஸ்…Digilockerல் புது அப்டேட்!Representative Image.

How to download pension certificate in digilocker: பென்ஷன் வாங்கும் வயதானவர்களுக்கு பயனளிக்கும் வழியில் Digi Locker ஆப்-பில் முக்கியமான சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது அவர்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

How to - பென்ஷன் வாங்கும் மூத்த குடிகளுக்கு…ஒரு குட் நியூஸ்…Digilockerல் புது அப்டேட்!Representative Image

முதல்ல டிஜிலாக்கர்-னா என்ன?

நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியில் கொண்டு வர பட்டது தான் இந்த Digi Locker. இதில் இந்திய குடிமக்களுக்கு அரசு தரும் முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க முடியும். இதற்கு ஆதார் எண் மட்டும் இருந்தால் போதும், வேலை சுலபமாகிவிடும். அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த டிஜிலாக்கர் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையானது டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் (Digital India Corporation - DIC) கீழ் இயங்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (Ministry of Electronics and Information Technology - MeitY) உருவாக்கப்பட்டது.

How to - பென்ஷன் வாங்கும் மூத்த குடிகளுக்கு…ஒரு குட் நியூஸ்…Digilockerல் புது அப்டேட்!Representative Image

அப்படி என்ன வசதி புதுசா!

இதில் வயதானவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் சான்றிதழை டவுன்லோட் செய்துகொள்ளும் வசதி சேர்க்கப் பட்டுள்ளது. இதை எப்படி பெறுவது என்னும் வழிமுறையை இப்பொது பார்க்கலாம். 

முதலில், டிஜிலாக்கர் வலைத்தளம் அல்லது உங்கள் போனில் இருக்கும் digi locker ஆப்-பை ஓபன் செய்து லாகின் செய்ய வேண்டும். அதற்கு உங்கள் ஆதார் எண் அல்லது மொபைல் எண் மற்றும் 6 டிஜிட் செக்யூரிட்டி பின் (Security PIN) கேட்கப்படும். 

அதை கொடுத்த பிறகு உங்களுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு லாகின் செய்யுங்கள். 

உள்ளே போனதும் "Bank of Maharashtra Pension Certifications in the carousel" என்ற ஆப்ஷனை தேடுங்கள் இல்லையென்றால் search  document இல் "pension document" என்று டைப் செய்யவும்.

திரையில் தெரியும் விருப்பங்களில் "Bank of Maharastra" என்பதை கிளிக் செய்யுங்கள்.

பின்னர் ஒரு சிறிய ஷீட் அல்லது படிவம் காட்டப்படும், அதில் ஓய்வூதியதாரரின் பிறந்த தேதி மற்றும் பிபிஓ எண்ணை (PPO Number) உள்ளிட வேண்டும்.

அடுத்து பிபிஓ எண் வரிசைக்கு, கீழ் இருக்கும் உள்ள செக்மார்க்-ஐ கிளிக் செய்யவும்.

இப்படி உங்களுடைய விவரங்களை தருவதனால், உங்களின் ஆவணங்கள் பற்றிய தகவலை தருவதற்கு டிஜிலாக்கருக்கு ஒப்புதல் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். 

கடைசியாக "Get Document" என்பதை செலக்ட் செய்வதால் உங்களுடைய பென்ஷன் சான்றிதழ் தயாராக இருக்கும். அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்