Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme GT Neo 5 Pro | ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கண்ஃபார்ம்!

Abhinesh A.R Updated:
Realme GT Neo 5 Pro | ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கண்ஃபார்ம்!Representative Image.

Upcoming Realme 5G Mobile: ரியல்மி நிறுவனம் இந்திய பயனர்களுக்காக புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில், நிறுவனத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அதன் மேம்பட்ட பதிப்பை நிறுவனம் வெளியிட தயாராகி வருகிறது. கிடைத்த தகவல்களின்படி, நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனை சந்தைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ குறித்து கசிந்த தகவல்கள்:

இந்த ஸ்மார்ட்போனானது பிளாக்‌ஷிப் தரத்தில் உருவாக்கப்படுகிறது. அதிக திறனை வெளிப்படுத்த, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இதில் கொடுக்கப்படுகிறது. கேமிங் முதல் அனைத்து விதமான வேலைகளுக்கும் இந்த பிராசஸர் ஆதரவாக இருக்கும்.

மேலும், 6.74” இன்ச் OLED டிஸ்ப்ளே இதில் கொடுக்கப்படும். இதன் ரெசலியூஷன் 1.5K தரத்தில் இருக்கும். ரேம் ஸ்டோரேஜ் பொருத்தவரை 16ஜிபி வரை கொடுக்கப்படலாம். மெமரி 512ஜிபி வரை இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல், வெளியாக காத்திருக்கும் புதிய ரியல்மி ஜிடி வகை போனில் 5000mAh பேட்டரி வழங்கப்படும். இதனை ஊக்குவிக்க 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கிடைக்கும். ரியல்மி தொடந்து குறைந்த விலையில், அதிக திறன்கொண்ட போன்களை சந்தையில் அறிமுகம் செய்து, பயனர்கள் மத்தியில் நன்மதிப்பை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட ரியல்மி 11 ப்ரோ+ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைக் காணலாம்.

* 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ டிஸ்ப்ளே

* ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

* 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் / 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்

* ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

* 5,000mAh பேட்டரி

* 200 மெகாபிக்சல் பிரதான லென்ஸுடன் மூன்று பின்பக்க கேமராக்கள்

* 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

* டைப்-சி யுஎஸ்பி

* 8ஜிபி ரேம் கொண்டுள்ள மொபைலின் விலை ரூ.27,999

* 12ஜிபி ரேம் கொண்டுள்ள மொபைலின் விலை ரூ.29,999

ரியல்மி 11 ப்ரோ 5ஜி சீரிஸ் அம்சங்கள்

*  ப்ரோ+ மாடல் போனுடன் ஒப்பிடுகையில் 11 ப்ரோ போனில் பின்பக்கத்தில் இரண்டு கேமரா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

* பின்பக்கம் 108 மெகாபிக்சல் பிரதான லென்ஸ்

* 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

* 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.23,999

* 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.24,999

* 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.27,999


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்