Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Things You should do before Selling Smartphone: பழைய போனை எக்ஸ்சேன்ச் பண்றதுக்கு முன்ன இத கண்டிப்பா பண்ணனும்! இல்லைனா ஆபத்து

Priyanka Hochumin May 29, 2022 & 12:35 [IST]
Things You should do before Selling Smartphone: பழைய போனை எக்ஸ்சேன்ச் பண்றதுக்கு முன்ன இத கண்டிப்பா பண்ணனும்! இல்லைனா ஆபத்து   Representative Image.

Things You should do before Selling Smartphone: உங்களின் பழைய ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணி அழுத்து போச்சா, எக்ஸ்சேன்ச்ல புது ஸ்மார்ட்போன் வாங்குற ஐடியா இருக்கா. நீங்க உங்க ஸ்மார்ட்போனை கொடுக்கிறதுக்கு முன்பு மறக்காம இதை செய்யணும் இல்லைனா ஆபத்து.

மக்களே தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பத்தால், நம்மால் டெக்னாலஜி இல்லாமல் வாழ முடியாது என்னும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுல எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அந்த அளவுக்கு தீமையும் உண்டு. உங்களின் ஸ்மார்ட்போனில் இருக்கும் தகவல்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு எதிராக பயன்படுத்தலாம். நீங்கள் உஙக்ளின் பழைய ஸ்மார்ட்போனை விற்று புதிய போன் வாங்க நினைத்தால் மறக்காமல் இந்த விஷயங்களை செய்ய வேண்டும்.

நீங்க சிங்கிளா...நீங்க கமிட் ஆகணுமா...உடனே டேட்டிங் ஆப்ல லாகின் பண்ணுங்க!

டேட்டா பேக்கப்

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் உங்களின் டேட்டாக்களை பேக்கப் எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும். உங்களுக்கு எப்படி பேக்கப் எடுக்க வேண்டும் என்று தெரியவில்லையா? அது ரொம்ப ஈஸி. முதலில் கம்ப்யூட்டர் அல்லது Hard Disk உடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணைக்கவும். பின்பு செட்டிங்ஸ் சென்று Backup & Reset என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து டேட்டாக்களை பேக்கப் செய்யலாம். அந்த டேட்டா நீங்கள் இணைத்திருக்கும் ஸ்டோரேஜ் டிவைஸில் பேக்கப் செய்யபப்டும்.

பர்சனல் டேட்டாவை டெலீட் செய்யவும்

நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு முக்கிய பர்சனல் டேட்டாக்களை நீக்கிவிடுங்கள். இதற்கு செட்டிங்ஸ் சென்று, அங்கு Backup & Reset ஆப்ஷனை கிளிக் செய்து, அதற்கு பின்பு Erase Data & Files என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்பொழுது அனைத்து டேட்டாவும் இருக்கிறதா என்பதை பார்த்து ஓகே பட்டனை பிரஸ் செய்யவும். இதன் மூலம் முக்கிய டேட்டா அனைத்தும் அழிக்கப்படும்.

உடனே அப்டேட்...இல்லைன்னா உங்க அக்கௌன்ட் ஹேக்!

வாட்ஸ்அப் டேட்டா பேக்கப்

இது தான் மிகவும் முக்கியமான ஒன்று, மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு முன்பு வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் எடுக்க மறக்காதீர்கள். உங்களுக்கு முக்கியமான சேட் புதிய போனில் இருக்க வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும். இதை செய்ய முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று சேட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு சேட் பேக்கப் என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களின் வாட்ஸ்அப் சேட் பேக்கப் நிறைவடையும். பிறகு உங்களுக்கு முக்கிய சேட்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத தை டெலீட் செய்து கொள்ளலாம்.  

Things You should do before Selling Smartphone, what to do before selling phone, what to do before selling android phone, things to do before exchanging phone, things to do before exchanging android phone, things to do before exchanging old phone,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்