Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

Indian Dating App: நீங்க சிங்கிளா...நீங்க கமிட் ஆகணுமா...உடனே டேட்டிங் ஆப்ல லாகின் பண்ணுங்க!

Priyanka Hochumin May 29, 2022 & 09:50 [IST]
Indian Dating App: நீங்க சிங்கிளா...நீங்க கமிட் ஆகணுமா...உடனே டேட்டிங் ஆப்ல லாகின் பண்ணுங்க!Representative Image.

Indian Dating App: சிங்கிளாக இருக்கும் நம்முடன் கமிடெட் நண்பர்கள் இருந்தால், எவ்ளோ வெறுப்பேத்துவாங்கன்னு நமக்குத் தெரியும். அப்படி பட்ட சிங்கிள்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட டேட்டிங் செயலிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

டேட்டிங் ஆப் | Indian Dating App Free 

நடிகர் சூர்யா வேல் படத்தில் முன்னாடியெல்லாம் ஒரு பொண்ணுக்கு மாப்பிளை பார்க்க அக்கம் பக்கத்தில் விசாரிப்பாங்க, இப்ப இந்த காலதுக்கு ஏத்த மாறி மேட்ரிமோனில கேட்டு தெரிஞ்சிக்கிறாங்க அவ்ளோ தான் என்பார். அது போலவே முன்பெல்லாம் நம்முடைய ஸ்கூல் அல்லது காலேஜ் கிளாஸ்ல படிக்கிறவங்களை தான் லவ் பண்ணுவாங்க. இப்பொழுது சோசியல் மீடியா பயன்பாடு அதிகரிப்பதால் யார் வேண்டுமானாலும் முன் பின் தெரியாதவர்களுடன் பேசி பழகி லவ் பண்ணிக்கலாம். இதன் மூலமாக நிறைய பிளஸ் மற்றும் மைனஸ் உண்டு.

இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், நம்முடைய டேஸ்டிற்கு ஏற்ற ஜோடி அமைவது தான் நாம் எல்லாரும் ஆசைப்படுவது. அந்த வகையில் தற்போது மக்கள் அதிகமாக டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் நம்முடைய டேஸ்டிற்கு ஏற்ற ஜோடியை நாம் கண்டுபிடிக்கலாம், பின்பு பேசி பழகி நமக்கு செட் ஆச்சுன்னா அடுத்த லெவலுக்குப் போகலாம்.

டேட்டிங் ஆப் வருவாய்Indian Dating App Income

ஸ்டேடிஸ்டா செய்த வகுப்பாய்வு படி, இந்தியாவின் ஆன்லைன் டேட்டிங் ஆப்ஸ் 2022 ஆம் ஆண்டில் 559 மில்லியன் டாலரை தாண்டி வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருடாந்திர வளர்ச்சியை பார்க்கும் பொழுது 11.80% விழுக்காடு விகிதத்தை (CAGR 2022-2026) எட்டும் என்று கூறப்படுகிறது.

இதோ இந்தியாவில் உருவான டேட்டிங் ஆப்ஸ்களின் லிஸ்ட். உங்களுக்கு இதில் ஏதேனும் செயலி பிடித்திருந்தால் இப்பவே டவுன்லோட் செய்து உங்களின் வாழ்க்கைத் துணையை கண்டுபிடியுங்கள்.

1. குவாக் குவாக் (Quack Quack)

இந்த நிறுவனம் 2009 ஆம் ஆண்டு ரவி மிட்டலால் என்பவரால் நிறுவப்பட்டது. ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட இந்த் ஆப், பிலே ஸ்டாரில் இதுவரை 10 மில்லியனுக்கு அதிகமான டவுன்லோட்களைப் பெற்றுள்ளது.

இதனுடைய ஸ்பேசாலிட்டி:

இது கல்வி, இருப்பிடம், தொழில் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அடிப்டையாகக் கொண்டு அதற்கு ஏற்ற ஜோடியை உங்களுக்கு காண்பிக்கும். மேலும் இது சேட் செய்யவும், ஊர் சுற்றவும், ஒரே டேஸ்டுடன் இருப்பவர்களை பாதுகாப்பாக சேர்த்து வைக்க வழிவகுக்கிறது.

2. வூ (Woo)

2014 இல் அங்கித் நௌடியல் மற்றும் சுமேஷ் மேனன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த ஆப் கூகுள் பிலே ஸ்டாரில் 10 மில்லியனுக்கும் மேல் டவுன்லோட்களைப் பெற்றுள்ளது.

இதனுடைய ஸ்பேசாலிட்டி:

இந்த ஆப் பெண்களுக்கு முன்னுரிமையை வழங்குகிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வாய்ஸ் கால் செய்யும் பொழுது பெண்களின் போன் நம்பர், அவர்களின் பெயர், அவர்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற முக்கிய தகவல்களை இந்த ஆப் பகிராது. கூடுதலாக இது லைவ் மெசேஜ் செய்யும் அம்சம், குரல் அறிமுகம் (voice introduction), கேள்வி மற்றும் பதில் போன்ற அம்சங்களை அளிக்கிறது. இதுவே நீங்கள் ப்ரீமியம் அக்கௌன்ட் வைத்திருப்பவராக இருந்தால், உங்களின் அக்கௌன்டை யாரெல்லாம் பார்க்கலாம் என்று நீங்கள் முடிவு செய்துகொள்ளும் அம்சத்தை வழங்குகிறது.

3. கோகாகா (GoGaga)

மீட் கனோடியா மற்றும் நேகா கனோடியா ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இந்த தளத்தை உருவாகியுள்ளனர். இந்த ஆப் கூகுள் பிலே ஸ்டோரில் 9 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களைப் பெற்றுள்ளது.

இதனுடைய ஸ்பேசாலிட்டி: 

பொதுவாக இந்தியாவில் டேட்டிங் செய்ய விரும்புவர்கள் அவர்களின் டேட்டிங் வாழ்க்கையை பிரைவசியாக வைத்திருக்க விரும்புவார்கள். அதனை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது இந்த ஆப். மேலும் மிகவும் தனித்துவமாக, நீங்கள் உங்களின் பார்ட்னரை கண்டுபிடிக்க அட்லீஸ்ட் ஒரு நண்பரையாவது உள்ளடக்க வேண்டும். அப்படி உங்களின் நம்பர் ஆப்பை டவுன்லோட் செய்து லொகின் செய்தால் மட்டுமே உங்களுக்கு பொருத்தங்கள் காண்பிக்கப்படும். இல்லையென்றால் உங்களுக்கு ஏற்ற ஜோடியை காண்பிக்கப்படமாட்டாது.

4. FRND

பானு பிரதாப் சிங் தன்வார், ஹர்திக் பன்சால், ஹர்ஷ்வர்தன் சங்கானி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து 2019 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். பெங்களூரை தலைமையாகக் கொண்டு இயங்கும் இந்த ஆப், கூகுள் பிலே ஸ்டோரில் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களைப் பெற்றுள்ளது.

இதனுடைய ஸ்பேசாலிட்டி: 

இந்த ஆப் முக்கியமாக ஆடியோ-ரொமான்ஸ் மற்றும் பிரண்ட்ஸ் சர்ச் போன்ற சேவைகளை பயனர்களுக்கு வழங்குகிறது. இது லைவ் ஸ்ட்ரீம் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. மேலும் மேட்ச்மேக்கர் லீட் சேட் மற்றும் பிளாட்ஃபார்மில் உள்ள கேம் ரூம்கள், மிகவும் பாதுகாப்பான, ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல் மூலம் மக்களை இணைக்க உதவுகிறது. கூடுதலாக, வாய்ஸ் மேட்ச், ராஜா ராணி சோர் போலீஸ் மற்றும் பிற ஆடியோ கேம்கள் மூலம் பயனர்கள் ஒருவருக்கு ஒருவரை இணைக்க இது உதவுகிறது.

5. ஹாய் ஹாய் ஆப் (Hi Hi App)

இந்த ஆப் 2020 ஆம் ஆண்டு ஜிதேஷ் பிஷ்ட்டால் என்பவரால் நிறுவப்பட்டது. பெங்களூரை இருப்பிடமாகக் கொண்ட இந்த ஆப், கூகுள் பிலே ஸ்டோரில் 5 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களைப் பெற்றுள்ளது.

இதனுடைய ஸ்பேசாலிட்டி:  

இது ஒரே டேஸ்ட் கொண்டுள்ள பயனர்களை, பாதுகாப்பாகவும், நம்பகமாகவும் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. மேலும் நீங்கள் புதிதாக ஒருவரிடம் சேட் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, இந்த செயலி வார்த்தைகளைப் பரிந்துரைக்கிறது. எனவே, நீங்கள் தயக்கம் இல்லாமல் உரையாடலை ஆரம்பிக்கலாம்.

Indian Dating App, Indian Dating sites, Indian Dating App free, Indian Dating Apps for married, Indian Dating App free no cost, Indian Dating App download, Indian Dating App like tinder, Indian Dating App in usa, Indian Dating App in Canada, Indian Dating App without registration, Indian Dating App Income, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்