Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Zoom allowed Hackers to Install Malware: உடனே அப்டேட்...இல்லைன்னா உங்க அக்கௌன்ட் ஹேக்!

Priyanka Hochumin May 28, 2022 & 20:10 [IST]
Zoom allowed Hackers to Install Malware: உடனே அப்டேட்...இல்லைன்னா உங்க அக்கௌன்ட் ஹேக்!Representative Image.

Zoom allowed Hackers to Install Malware: ஹேக்கர்கள் குறிப்பிட்ட டிவைஸ்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி ஹேக் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜூம் ஒப்புக்கொண்டது.

உலகில் எந்த முலையில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இந்த ஜூம் ஆப் உதவுகிறது. அப்படி பட்ட இந்த ஆப்-பில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயனர்களின் கம்ப்யூட்டர், லேப்டாப், ஆண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்களில் ஹேக்கர்கள் மால்வேர் இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கிறது என்னும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இது ஜூம் ஆப் வைத்திருக்கும் அனைவருக்கும் நடக்குமா என்று கேட்டால்?  இல்லை. ஹேக்கர்கள் குறிப்பிட்ட பயனர்களின் சாதனங்களை குறிவைத்து ஒரு டம்மி மெசேஜ் அனுப்புவதாக கூறப்படுகிறது. இந்த குறைபாட்டையும் செயலையும் ஜூம் ஒப்புக்கொண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவிய காரணத்தால் ஸ்கூல் முதல் நிறுவனங்கள் வரை அணைத்து இடத்திலும் ஆன்லைன் மூலம் நடைபெறுவதால் ஜூம் இன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை தவறான வழியில் பயன்படுத்த ஹேக்கர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அறிக்கையின் படி, மீட்டிங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜூம் கிளைண்ட் வெர்ஸன் 5.10.0க்கு முன்னதாக ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், லினக்ஸ், மேகோஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய சிஸ்டங்களில் இயங்கியுள்ளது. வெர்ஸன் 5.10.0-க்கு முன்னதாக பயன்படுத்தப்பட்ட இந்த ஆப் ஹோஸ்டர்பெயரை சரியாக வெரிஃபை செய்ய தவறவிட்டதாக கூறப்படுகிறது. ஜூம் ஆப்பை பயன்படுத்தும் பொழுது, சந்தேகத்திற்கு இடமில்லாமல் கிளைண்டை ஏமாற்றி தீங்கிழைக்கும் பயன்பாடு மிக நுட்பமான வகையில் பயன்படுத்தலாம் என ஜூம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. இந்த கோளாறை கூகுளின் ப்ராஜெக்ட் ஜீரோ பிழை ஹண்டரான (Google's Project Zero bug hunter) இவான் ஃப்ராட்ரிக் கண்டுபிடித்தார்.

பாஸ்வோர்ட் திருடுபோச்சுனா...அடுத்த செகண்ட்...அலெர்ட் மெசேஜ்!

நீங்கள் அடிக்கடி ஜூம் செயலியை பயன்படுத்துவரா, இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முதலில் ஜூம் ஆப்-பை அப்டேட் செய்யுங்கள்.ஏனெனில் இந்த பிரச்சனை தெரிந்தவுடன் முதலில் இதனை சரி செய்ய அப்டேட்டை உருவாக்கி பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, முதலில் ஜூம் ஆப்-பய் அப்டேட் செய்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். நம்ப என்ன பண்ணோம், நம்பள எதுக்கு ஹேக் பண்ண போறாங்க என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். நம்முடைய சாதனத்தில் இருக்கும் ஒரு சின்ன விஷயம் தெரிந்தாலும் அது பிறருக்கு ஒரு இன்வெஸ்ட்மென்ட் தான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஜூம் வெளியிட்ட அப்டேட்

ஜூம் கால் பயன்படுத்தும் பொழுதும் வெவேறு மொழிகள் பேசும் அனைவரும் அதில் பங்கேற்பார்கள். எனவே உலக மொழி என்று கூறப்படும் ஆங்கில மொழியைத் தான் அதிகமாக பயன்படுத்தும் நிர்பந்தனைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் ஜூம் மீட்டிங் கால் நாடாகும் பொழுது ரியல் டைம் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் மொழிபெயர்ப்பு பயன்பாட்டை இணைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக முதலில் 12 மொழிகளுக்கு ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன்களை வழங்க நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இதனை 30 மொழிகளுக்கு நீடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் மட்டும் வெளியானால் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சரி, தரலாம்க அவர்களின் மொழியில் பேசலாம். அது மற்றவர்களுக்கு அவர்களின் மொழியில் டிரான்ஸ்லேட் செய்து புரிந்துகொள்ளலாம்.

ஒரு டைம் சார்ஜ் போட்டா போதும்…. 45 நாளுக்கு யூஸ் பண்ணலாம்….!

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்