Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Password Manager: பாஸ்வோர்ட் திருடுபோச்சுனா...அடுத்த செகண்ட்...அலெர்ட் மெசேஜ்!

Priyanka Hochumin May 28, 2022 & 19:05 [IST]
Password Manager: பாஸ்வோர்ட் திருடுபோச்சுனா...அடுத்த செகண்ட்...அலெர்ட் மெசேஜ்!Representative Image.

Password Manager: கூகுள் தற்போது வெளியிட்ட அப்டேட்டில் பயனர்களின் பாஸ்வோர்ட் திருடப்பட்டால், கூகுள் அசிஸ்டன்ட் உங்களை அலெர்ட் செய்யும்.

பெரும்பாலாக உங்களின் சோசியல் மீடியா அக்கௌன்ட்டை பயன்படுத்த நீங்கள் பாஸ்வோர்ட் உபயோகிப்பீர்கள்.இது உங்களைத் தவிர வேற யாரும் பயன்படுத்த கூடாது என்னும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிலர் உங்களின் பாஸ்வோர்டை திருடி உங்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள். நம்முடைய பாஸ்வோர்ட் திருடு போனது நமக்கு தெரியாது. இந்த பிரச்சனையில் இருந்து பயனர்களை மீட்டெடுக்க கூகுள் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது எப்படி செயல்படுகிறது, அது என்ன அப்டேட் என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

BSNL-ல நீங்க ரூ.2,399/-க்கு ரீசார்ஜ் பண்ணா...365 நாள் இல்ல...இனி 425 நாளுக்கு வேலிடிட்டி உண்டு!

கூகுள் அப்டேட்

மே 23 ஆம் தேதி அன்று Google play store ஐப் பயன்படுத்தி, v22.18 அப்டேட்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள் நிறுவனம் வெளியிட்டது. மேலும் கூகுள் ப்ளே ஸ்டோர் v30.3 அப்டேட்டையும் இத்துடன் பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில அம்சங்கள் புதிய அப்டேட்டில் இல்லை. மேலும் இந்த அப்டேட் முக்கியமாக பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கு கவனம் செலுத்தி முற்றிலும் மேம்படுத்தியுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர் v30.3 அப்டேட்டை பயன்படுத்தி பயனர்கள் புது அனுபவத்தை பெற முடியும். ஒரு சில நேரங்களில் நீங்கள் பயன்படுத்தும் ஆப் சற்று ஸ்லோவாக இருக்கலாம், இந்த அப்டேட் மூலம் அந்த பிரச்சனை முற்றிலும் இருக்காது. நீங்கள் அறியாமலே ஸ்மார்ட்போன் மற்றும் ஆப் வேகமாக செயல்படும். கூடுதலாக, Play Pass மற்றும் PlayPoint போன்ற செயலிகளை புதிய அப்டேட் வழங்கியுள்ளது. மேலும் கூகுள் ப்ளே சர்வீசஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆண்ட்ராய்டு போன், ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டிவி, வயர் OS போன்றவையும் புதிய அப்டேட்டில் பயன்படுத்தலாம்.

பாஸ்வோர்ட் போட்டு அழுத்து போச்சா...அப்ப இப்படி ட்ரை பண்ணுங்க! உங்க ஃபைல் பத்திரமா இருக்கும்!

இதன் செயல்பாடு

இந்த அப்டேட்டில் கூகுள், பாஸ்வோர்ட் செக்கர் எனப்படும் பாஸ்வோர்ட் வெரிஃபிகேஷனின் புது வெர்ஸனை இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பயனரின் பெயர் அல்லது பாஸ்வோர்ட் திருடப்பட்டாலோ அல்லது கசிந்தாலோ கூகுள் அசிஸ்டன்ட் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். மேலும் வலுவான பாஸ்வோர்டை உருவாக்க உங்களுக்கு உதவி செய்யும் அல்லது பாஸ்வோர்ட் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை உங்களுக்கு அளிக்கும். அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்துக்கொள்ளலாம். 

இது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதால் உங்களுக்கு அலெர்ட் மெசேஜ் அனுப்பும். இதன் மூலம் பயனர்களின் பாதுகாப்பு குறித்து எந்த விதத்திலும் கூகுள் நிறுவனம் சமரசம் ஆகாது என்று தெரிகிறது. இந்த புது அப்டேட் பயனர்களின் செக்யூரிட்டியை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க ஸ்மார்ட்போன்ல இந்த ஆப் இருக்கா...உடனே தூக்கிடுங்க!

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்