Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tips to know before buying a Refrigerator: ஒருவேளை ஃப்ரிட்ஜ் வாங்குற ஐடியா இருந்தா...இது இருக்கானு பாருங்க!

Priyanka Hochumin August 16, 2022 & 16:00 [IST]
Tips to know before buying a Refrigerator: ஒருவேளை ஃப்ரிட்ஜ் வாங்குற ஐடியா இருந்தா...இது இருக்கானு பாருங்க!  Representative Image.

Tips to know before buying a Refrigerator: நம் வீட்டில் இருக்கும் கிட்சேன் பொருட்களுள் அதிகமாக பயன்படுத்துவது ஃப்ரிட்ஜ். ஆனா இதை நாம்ப வாங்குறதுக்குள்ள ஒன்றுக்கு நூறு முறை யோசிப்போம், அது நல்லதா இருக்கான்னு ரெண்டாவதா தான் யோசிப்போம். ஆனா முதல்ல வருவது பட்ஜெட்! இப்படி யோசிக்கிற வாடிக்கையாளர்கள் தான் ஈஸி கன்வின்ஸ் பண்ணி வாங்க வச்சிடுறாங்க. அப்படி இருக்குறவங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயத்தை தான் இந்த பதிவில் நாங்க கூறப்போகிறோம். அதுனால இனிமே ஃப்ரிட்ஜ் வாங்குறதுக்கு முன்ன இதையெல்லாம் செக் பன்னிட்டு வாங்குங்க.

இது இல்லைனா வாங்கவே வாங்காதீங்க

வீட்டில் அதிகம் கரண்ட் இழுப்பது ஒன்னு ஏசி இன்னொன்னு ஃப்ரிட்ஜ். அதுனால கரண்ட் சேமிக்கும் வழியை அளிக்கும் Vacation Mode என்னும் ரெஃப்ரிஜிரேட்டர் டெக்னாலஜி இருக்கும் ஃப்ரிட்ஜா பாத்து வாங்குங்க. இப்படி பட்ட அம்சம் தற்போது வெளியாகி வரும் லேட்டஸ்ட் மாடல் ரெஃப்ரிஜிரேட்டர்களில் தான் வருகிறது. இந்த அம்சம் யாருக்கு பயன்படும் என்றால், வீட்டில் இல்லாமல் அதிக நேரம் வேலையாக வெளியே செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியை செய்கிறது. இந்த அம்சம் மட்டும் இருந்தால் மின்சார கட்டணத்தை முடிந்த வரை குறைக்கலாம்.

ஆமா இது எப்படி வேலை செய்கிறது?

அதாவது பேரில் இருப்பது போலவே நீங்கள் ஏதேனும் வேக்கேஷன் காரணமாக நீண்ட நாள் வெளியே செல்லும் போது, உங்களின் குளிர் சாதனப்பெட்டியின் மின் பயன்பாட்டை குறைக்கும் வசதிக்காக இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அம்சம் செயல்பாட்டில் இருக்கும் பொழுது எப்பையும் போல இயங்கும். அதே சமயம் மற்ற கம்பார்ட்மென்ட்களின் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸில் பராமரிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் நீண்ட நாள் மின் பயன்பாட்டை பராமரிக்க முடியும்.

சரி இது எந்த ஃப்ரிட்ஜ்-ல இருக்கும்!

இந்த அம்சம் நார்மல் ஃப்ரிட்ஜில் கண்டிப்பா இருக்காது. ஆனா இப்போது வரும் லேட்டஸ்ட் மாடல் ஃப்ரிட்ஜ்-களில் கட்டாயமாக இருக்கும். அதாவது டிஸ்பிளே மற்றும் கன்ட்ரோல் பேனல் கொண்ட அதிநவீன ரெஃப்ரிஜிரேட்டரில் வருகிறது. மேலும் இது பெரும்பாலான பிரெஞ்சு அல்லது சைட் பை சைட் டோர் குளிர்சாதன பெட்டியில் ஆக்சஸ் கிடைக்கும்.

எனவே, நீங்க ஃப்ரிட்ஜ் வாங்க முடிவு செய்தால் இந்த அம்சம் இருக்கும் குளிர்சாதன பெட்டியை பார்த்து வாங்குங்கள்.

Tips to know before buying a Refrigerator, Tips to know before buying a Refrigerator in india, Tips to know before buying a Refrigerator in tamil, Tips to know before buying fridge, things to consider before buying a fridge.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்