Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனிமே WhastApp-ல் சேட் லாக் செய்து ரகசியமா பேசலாம் | WhatsApp New Chat Lock Update

Priyanka Hochumin Updated:
இனிமே WhastApp-ல் சேட் லாக் செய்து ரகசியமா பேசலாம் | WhatsApp New Chat Lock UpdateRepresentative Image.

வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட சேட்களை password or biometric authentication பயன்படுத்தி பயனர்கள் லாக் செய்யும் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பை கடவுச்சொற்கள் மூலம் லாக் சித்திருக்கிறோம். ஆனால் இந்த அப்டேட்டில் குறிப்பிட்ட சேட்களை கடவுச்சொற்கள் பயன்படுத்தி லாக் செய்ய முடியும். அப்படி லாக் செய்யும் சேட்கள் தனி folder-ல் சேமிக்கப்படும். மேலும் நோட்டிபிகேஷன் வரும் போது பெயர் மற்றும் மெசேஜ் மறைக்கப்படும், அதனை அங்கீகாரத்திற்குப் பின் மட்டுமே அணுக முடியும். இந்த அப்டேட் மக்கள் பலரால் வரவேற்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டு சாதனங்களுக்கும் இந்த அப்டேட் அளிக்கப்படும். மேலும் நீங்கள் லாக் செய்த நபரின் சேட்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். ஒருவேளை உங்களின் போனை யாரேனும் எடுத்து அணுகினால் அவர்களுக்கு சேட் லாக் செய்யப்பட்டது தெரிய வராது. வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், என்க்ரிப்ட் செய்யப்பட்ட அரட்டை காப்புப்பிரதி [enchrypted chat backup], மறைந்து போகும் செய்திகள் [disappearing messages], ஸ்கிரீன்ஷாட் தடுப்பது [screenshot blocking] மற்றும் கடைசியாகப் பார்த்த நிலையை [status] யார் அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் திறன் போன்ற பல பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய அப்டேட் மூலம், மெட்டா வாட்ஸ்அப்பின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்துகிறது.

வாட்ஸ்அப்பில் சேட் லாக் அப்டேட்டை எவ்வாறு இயக்குவது:

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்சனை டவுன்லோட் அல்லது அப்டேட் செய்யவும்.

நீங்கள் லாக் செய்ய விரும்பும் குறிப்பிட்ட சேட்டிற்கு செல்லவும்.

Profile படத்தை கிளிக் செய்யவும்.

மறைந்து வரும் மெசேஜ் மெனுவிற்கு கீழே "சேட் லாக்" என்ற புதிய விருப்பத்தை உங்களால் காண முடியும்.

சேட் லாக்கை இயக்கி, உங்கள் ஃபோன் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.

வாட்ஸ்அப்பில் லாக் செய்யப்பட்ட அரட்டைகளை அணுகுவது எப்படி:

பூட்டிய அனைத்து அரட்டைகளையும் அணுக வாட்ஸ்அப் homepage-ஐ கீழே ஸ்வைப் செய்யவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்