Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரியல்மி ஜிடி 5...1டிபி ஸ்டோரேஜ்...50எம்பி கேமரா...வேற லெவல் ரிலீஸ் போங்க | Realme GT 5 Specifications

Priyanka Hochumin Updated:
ரியல்மி ஜிடி 5...1டிபி ஸ்டோரேஜ்...50எம்பி கேமரா...வேற லெவல் ரிலீஸ் போங்க | Realme GT 5 SpecificationsRepresentative Image.

நேற்று சீனாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதனின் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பற்றி பார்க்கலாம்.

6.74 இன்ச் AMOLED டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1440Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது. 12ஜிபி + 256ஜிபி, 16ஜிபி + 512ஜிபி மற்றும் 24ஜிபி + 1டிபி என்று மூன்று ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டை கொண்டுள்ளது. ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் + 8 எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் உள்ளிட்ட ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டு வருகிறது. அதே போல் செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 16 எம்பி கேமரா அமைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் சிப்செட்டை கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. அது மட்டும் இன்றி 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5240mAh பேட்டரி கொண்ட வேரியண்ட் என மொத்தம் இரண்டு வேரியண்ட் கொண்டு வருகிறது.

கூடுதலாக, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் அளிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ரூ. 34,000/-க்கும், 16ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ. 37,377/-க்கும், 24ஜிபி + 1டிபி வேரியண்ட் ரூ. 43,042/-க்கும் விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்