ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஐபோன் 15 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவற்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 சீரிஸில் - ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 என மொத்தம் 4 மாடல்கள் அடங்கும். இந்த பதிவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் புதிய ஆப்பிள் எஸ் 9 பிராசஸரைக் கொண்டுள்ளது. இதன் மூலம் சிரி டிவைஸ் வேகமாக இயங்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் செகண்ட்-ஜென் அல்ட்ரா-வைட் பேண்ட் (UWB) சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஐபோன் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஹோம் பாட் அருகே கொண்டு வரும்போது வாட்ச்சில் மியூசிக் விட்ஜெட்டை ஆக்டிவேட் செய்ய முடியும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9-ன் டிஸ்பிளே 2,000 நிட்கள் வரை பிரைட்நெஸை ஆதரிக்கிறது. அதனை மேலும் 1 நிட் வரையிலும் நம்மால் கொண்டு செல்ல முடியும்.
இதில் இருக்கும் முக்கிய அம்சங்களுள் ஒன்று டபுள்-டேப். உங்களின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் வாட்ச்சை இரண்டு முறை தட்டினால் போதும். அதில் இருக்கும் ஏராளமான சென்சார்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்க அல்லது நிராகரிக்க, விட்ஜெட்கள் மூலம் பிரௌஸ் செய்ய மற்றும் பல விஷயங்களுக்கு பயன்படுத்த முடியும். அவை அனைத்தையும் ஸ்கிரீனை தொடாமலே நாம் செய்யலாம். வாட்ச் சீரிஸ் 9 வாட்ச் ஆனது அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 41 மிமீ மற்றும் 45 மிமீ கேஸ் அளவு மற்றும் பல கலர் ஆப்ஷனில் கிடைக்கும். இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இதனின் ஆரம்ப விலை ரூ.41,900/- என குறைப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…