Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

How to: வீட்டில் இருக்கும் ரெண்டே பொருள் வச்சு...போன் கவரை ஈஸியா...கிளீன் பண்ணலாம்!

Priyanka Hochumin November 12, 2022 & 14:00 [IST]
How to: வீட்டில் இருக்கும் ரெண்டே பொருள் வச்சு...போன் கவரை ஈஸியா...கிளீன் பண்ணலாம்!Representative Image.

தூங்கும் நேரத்தைத் தவிர மீதி இருக்கும் எல்லா நேரமும் நாம் பயன்படுத்தும் ஒரு முக்கியமான விஷயம் தான் மொபைல் போன். ஆனா நம்மள்ள எத்தனை பேரு போனையும், போன் கவரையும் அடிக்கடி சுத்தம் செய்யிறோம் சொல்லுங்க. அப்படி ஒருவேளை கிளீன் பண்ணனும்னா உடனே கடைக்கு போன் சர்வீஸ் பண்றதுன்னு தண்டமா காசு செலவு பண்ண வேண்டியது. இனிமே இதெல்லாம் தேவையே இல்ல, வீட்ல இருக்குற ஒன்னு ரெண்டு பொருளை வச்சு நாமே ஈஸியா சுத்தம் பண்ணிக்கலாம். அது எப்படி பண்றதுன்னு இந்த பதிவுல பாத்து தெரிஞ்சிக்கலாம் வாங்க. உங்களுக்கு பயனுள்ளதா இருந்தா நீங்க மட்டும் பயன் பெறாம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் அனுப்பி ஹெல்ப் பண்ணுங்க.

How to: வீட்டில் இருக்கும் ரெண்டே பொருள் வச்சு...போன் கவரை ஈஸியா...கிளீன் பண்ணலாம்!Representative Image

டைப் 1: ஸ்பிரே

இதற்கு தேவையானது - ஆல்கஹால் கலந்த ஸ்பிரே மற்றும் மைக்ரோ ஃபைபர் துணி.

ஒரு சுத்தமான மைக்ரோ ஃபைபர் துணியில் ஆல்கஹால் கலந்த ஸ்பிரேவை கொஞ்சம் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.

இப்போது அதை பயன்படுத்தி போன் கவரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வட்டவடிவில் தேய்த்து சுத்தம் செய்யவும்.

மேலும் ரொம்ப அழுத்தி தேய்க்காமல் அழுக்குகள் மற்றும் கறைகளை எடுக்கவும். பின்பு மற்றொரு ஈரமில்லாத மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு துடைக்கவும். உடனே அந்த போன் கவரை பயன்படுத்தாமல் சிறிது நேரம் உலர விட்டு பின்பு பயன்படுத்தவும்.

முக்கிய குறிப்பு - நேரடியாக போன் கவரில் ஸ்பிரே செய்வதோ அல்லது ஸ்பிரேவில் போன் கவரை ஊற வைக்கவோ கூடாது.

How to: வீட்டில் இருக்கும் ரெண்டே பொருள் வச்சு...போன் கவரை ஈஸியா...கிளீன் பண்ணலாம்!Representative Image

டைப் 2: பேக்கிங் சோடா

இதற்கு தேவையானது - பேக்கிங் சோடா, வெந்நீர் மற்றும் பிரஷ்.

போன் கவரை எடுத்து அதில் இருக்கும் கறைகளின் மீது பேக்கிங் சோடாவை சிறிது தூவி 3 நிமிடம் வரை அப்படியே விடுங்கள்.

ஏதேனும் பழைய டூத் பிரஷ் இருந்தால் அதனை பயன்படுத்தி பேக்கிங் சோடா தூவிய இடங்களில் மென்மையாக தேய்த்து கறைகளை அகற்றவும்.

பின்பு கரெக்ட்டான சூட்டில் இருக்கும் வெந்நீரில் கழுவி எடுத்து, ஈரம் காயும் வரை உளரவிடுங்கள். பின்பு வர துணி ஒன்றில் துடைத்துவிட்டு போனில் போட்டு தாராளமாக பயன்படுத்தலாம்.

How to: வீட்டில் இருக்கும் ரெண்டே பொருள் வச்சு...போன் கவரை ஈஸியா...கிளீன் பண்ணலாம்!Representative Image

டைப் 3: மைல்டு சோப்பு லிக்விட்

தேவியானவை மைல்டு சோப்பு லிக்விட், பிரஷ் மற்றும் சுத்தமான துணி அவ்ளோ தான்.

ஒரு கிண்ணம் வெந்நீரில் ரெண்டு சொட்டு மைல்டு சோப்பு லிக்விட்டை சேர்க்கவும்.

அதில் போன் கவரை 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பின்பு அதை எடுத்து பிரஷ் வைத்து கறை மற்றும் அழுக்கு இருக்கும் இடத்தில மென்மையாக தேய்த்து அழுக்குகளை அகற்றவும்.

பிறகு சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி வர துணியை வைத்து தொடைத்து சுத்தப்படுத்தவும். ஒரு மணி நேரம் நன்றாக உலர விட்டு பின்பு பயன்படுத்துங்கள்.

இந்த முறையில் சுத்தம் செய்தால் போன் கவர் பளிச்சென்று ஆகிவிடும். மாதம் ஒரு முறை இப்படி செய்து உங்கள் காசை மிச்சப்படுத்துங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்