Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Whatsapp Hide Online Status in Tamil: இனி யாரும் நம்மல உளவு பாக்க முடியாது! அப்படி ஒன்ன கண்டுபிடிச்சான் பாரு WhatsApp!

Priyanka Hochumin July 03, 2022 & 09:45 [IST]
Whatsapp Hide Online Status in Tamil: இனி யாரும் நம்மல உளவு பாக்க முடியாது! அப்படி ஒன்ன கண்டுபிடிச்சான் பாரு WhatsApp!Representative Image.

Whatsapp Hide Online Status in Tamil: அதிக மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் இப்பொழுது புதுசா ஒரு அம்சத்தை இறக்கி இருக்கு. அது என்னென்ன தெரிஞ்சா நீங்க சந்தோசத்துள்ள துள்ளி குதிப்பீங்க.

இப்பொழுது பெரும்பாலும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. தங்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் நாம் மெசேஜ் அனுப்புகிறோம். ஆனால் நமக்கு கடுப்பாகிறது, எப்பொழுது? சும்மா சும்மா மெசேஜ் அனுப்பிட்டு ரிப்ளை பண்ணு என்று ஒரு சில பேர் நம்மை வெறுப்பேத்துவார்கள். அதற்காக வந்த அப்டேட் தான் 'ஹைட்' ஆப்ஷன். அதாவது நீங்கள் மெசேஜ் பார்திடீர்கள் என்னும் ப்ளூ டிக் மார்கையும், கடைசியாக எப்பொழுது வாட்ஸ்அப் வந்து பார்த்தீர்கள் என்பதையும் நாம் ஹைட் செய்து வச்சிக்கலாம். அப்பொழுது தான் யாராவது ஏன் நான் உனக்கு மெசேஜ் பண்ணேன் ஆனா நீ ரிப்ளை பண்ணவே இல்ல என்று கேட்டால் சாரி நான் நேத்து வாட்ஸ்அப் பாக்கவே இல்ல என்று டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிடலாம்.

ஆனால் அதில் ஒரு சிக்கல்

அது என்ன சிக்கல் என்றால், நாம் இப்படி பொய் சொல்லி டிமிக்கி கொடுத்தாலும் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொழுது 'ஆன்லைன்' என்று காமிக்குமே அதை எப்படி ஹைட் பண்றது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு பயனர்கள் கோரிக்கை வைத்து கொண்டே இருந்தனர். ஏனெனில் இந்த அம்சம் மட்டும் செயல்பாட்டிற்கு வந்தால் நம்மை உளவு பார்ப்பவர்கள், நம்மை பின்தொடர்பவர்கள் ஆகியவர்களிடம் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். எனவே, இதற்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இதை நடைமுறைக்கு கொண்டுவருவதாக WABetaInfo கூறியது.

நீங்க பாத்து ஓகே சொல்றது தான்

மேலும் WABetaInfo ஒரு ட்வீட் இல் 'ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் திறனில் வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுகிறது!'. ஒருவழியாக, நீங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் போது, நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள் என்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வுசெய்யும் அம்சம் உங்களுக்கு அணுக கிடைக்க உள்ளது என்று தெள்ளத்தெளிவாக கூறியது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய டிவைஸ்களில் அடுத்த அப்டேட்டாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை எப்படி கண்டறிய முடியும்

பொதுவாக ஒரு அப்டேட் வர வேண்டும் என்றால் முதலில் ஒரு யூசருக்கு அதை கொடுத்து செக் செய்து பார்ப்பார்கள். பிறகு அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிந்ததும் அதை மற்ற யூசர்களுக்கு அனுப்புவார்கள். அப்படி இருக்கும் பொழுது நமக்கு இந்த அப்டேட் வந்துவிட்டதா? என்று எப்படி தெரிந்துகொள்வது. தொடர்ந்து படியுங்கள்!

இதை நீங்க வாட்ஸ்அப் ப்ரைவஸி செட்டிங்ஸ் (WhatsApp Privacy Settings) இல் பார்க்க முடியும். மேலும் WABetaInfo

வெளியிட ஷ்கிரீன் ஷாட் படி, இந்த இந்த அம்சம் லாஸ்ட் சீன் செட்டிங்ஸ்-க்கு உள்ளேயே, இரண்டு புதிய விருப்பங்களின் கீழ் அணுக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ""Everyone" மற்றும் "Same as Last Seen" என்கிற பெயரின் கீழ் 'ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ்' அம்சம் கிடைக்கும்.

இப்படி அனைவரும் எதிர்பார்க்கும் இந்த அம்சம் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்று கேட்டால் நிஜமாக தெரியாது. ஆனால் இது தற்போது உருவாக்குதலில் இருக்கிறது, இன்னும் சோதனை கட்டத்திற்கு வராததால் இன்னும் சிறிது காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சற்று பொறுமையுடன் வெயிட் பண்ணுங்க!

Whatsapp Hide Online Status in Tamil, how to hide whatsapp online status while chatting 2022, whatsapp hide online new features, whatsapp new update, whatsapp new update 2022, whatsapp new features,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்