Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New OS103 for Chrome: கிராமில் வந்துள்ள புது வெர்சன்...என்னமா யோசிச்சிருக்காங்க தெரியுமா?

Priyanka Hochumin June 24, 2022 & 13:30 [IST]
New OS103 for Chrome: கிராமில் வந்துள்ள புது வெர்சன்...என்னமா யோசிச்சிருக்காங்க தெரியுமா?Representative Image.

New OS103 for Chrome: இந்த புதிய அப்டேட்டில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி அன்று கூகுள் தங்களின் படைப்பான Chrome இல் 103 வெர்சனை அறிமுகப்படுத்தியது. இட்னஹ் புது வெர்சனில் ஃபாஸ்டர் பேஜ் லோட், வலை பயன்பாடுகளுக்கான எழுத்துருக்கள் (fonts for web apps) மற்றும் நம்மளை அடிக்கடி கடுப்பேற்றும் அறிவிப்புத் தூண்டுதல்களைத் (notification prompts) தடுப்பதற்கான கூடுதல் கருவிகள் உள்ளன.   

ஃபாஸ்டர் பேஜ் லோட் டைம்

இந்த அவசர உலகத்தில் மக்களால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடியவில்லை. அதுவும் சோசியல் மீடியாவில் லோடிங் டைம் இருந்தால் அதற்கு மேல் கடுப்பான விஷயம் அவர்களுக்கு இருக்கவே இருக்காது. அதனால் பயனர்கள் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் சர்ச் செய்யும் பொழுது அந்த பேஜ் லோட் ஆகாமல் வேகமாக திரையில் வர இந்த 103 வெர்சன் உதவுகிறது.

வெப் ஆப்ஸ் லோக்கல் ஃபான்ட்களை பயன்படுத்தலாம்

கிரோமின் ஒவ்வொரு புது ரிலீஸும் வெப் ஆப்ஸகளின் மேம்பாடுகளை உள்ளடக்கியது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. Chrome 103 இன் முக்கிய பங்களிப்பு லோக்கல் ஃபான்ட் அணுகல் ஆகும். இதுவரை உங்களின் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் நீங்க சேகரித்து வைத்திருக்கும் ஃபான்ட்களை தான் வெப் ஆப் பயன்படுத்தும். ஆனால் இப்பொழுது வெப் ஆப்ஸ் புதிய ஃபான்ட்களை டவுன்லோட் செய்ய உங்களிடம் அனுமதி கேட்கும். ஆனால் இந்த மாற்றம் அவற்றை நேட்டிவ் ஆப்ஸ் போலவே செயல்பட வைக்கும்.


Digital Marketing in You tube: இன்னும் நாளே வருடத்தில் இது தான் டாப்...இப்பவே கத்துக்கோங்க! அப்புறம் லட்சக்கணக்கில் லாபம் தான்!


மெஷின் லேர்னிங் மூலம் அறிவிப்புகளைத் தடுக்கிறது

நமக்கு எப்பொழுது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பொழுது நமக்கு பிடிக்காத ஒரே விஷயம் நடுவில் இந்த நோட்டிபிகேஷன் வருவது தான். இந்த வெர்சனில், மெஷின் லேர்னிங் ஒரு பயனருக்கு இணையதளத்தில் இருந்து வரும் அறிவிப்புகளைத் தேர்வுசெய்ய வாய்ப்பில்லாதபோது Chrome ஐக் கணிக்க உதவும். பிறகு இது உங்களுக்கான எரிச்சலூட்டும் தூண்டுதல்களைத் தடுக்கும். Chrome இன் முடிவை நீங்கள் ஏற்கவில்லை என்றால், "இந்த தளத்தை அனுமதி" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.

இது போன்று இன்னும் நிறைய அப்டேட்கள் இந்த OS 103 வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எளிதில் டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள். இல்லையென்றால், உங்களுக்கு எரிச்சலூட்டும் நிறைய விஷயங்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும்.  


Telegram Premium Features: வேற லெவலில் வரும் டெலிகிராம் பிரீமியத்தின் அம்சங்கள்… 


New OS103 for Chrome, new os 103 in chrome download, chrome os 103, chrome 103, chrome 103 whats new, chrome 103 release date, chrome 103 version, chrome 103 features,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்