Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WhastApp Community Feature: வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்..இந்த அப்டேட் வர கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

Priyanka Hochumin August 24, 2022 & 09:45 [IST]
WhastApp Community Feature: வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்..இந்த அப்டேட் வர கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!Representative Image.

WhastApp Community Feature: நாம் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்பான வாட்ஸ்அப் புது அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அது எந்த அளவுக்கு பயனர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அவ்ளோ எளிதான விஷயம் கிடையாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனை நிறைவேற்ற மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அயலாது பாடுபட்டு கொண்டிருக்கிறது. எனவே, புது புது அப்டேட்களை அவ்வப்போது வெளியிடுகின்றனர். இந்த தகவல் மிகவும் நம்பகமான WABetaInfo மூலம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட்டஸ் பார்க்க இத பண்ணுங்க!

நாம் ஒருவரின் ஸ்டேட்டஸ் பார்க்க வாட்ஸ்அப்பில் அதற்கு என்று தனி பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதனுள் உங்கள் கான்டக்ட்ஸில் இருப்பவர்கள் போட்டோ அலல்து வீடியோ உப்லோஅது செய்தால் நம்மால் அதனை ஸ்டேட்டஸ் பகுதிக்குச் சென்று பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது வெளியான அப்டேட் மூலம் சாட் லிஸ்டில் இருந்தே நம்மால் பார்க்க முடியும். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், ஒருவரின் ப்ரொபைல் பிக்ஸ்சரை டேப் செய்தால் அவர்கள் பதிவிட்ட ஸ்டேட்டஸை நாம் பார்க்க முடியும். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்சம் நாட்களில் iOS-க்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Communities உருவாக்கலாம்...

அடுத்த அப்டேட் என்னென்னா Communities உருவாக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களில் ஒரு சில குறிப்பிட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் அப்டேட்களை துல்லியமாக வெளியிடும் WABetaInfo குறிப்பிடுவது என்னவென்றால், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.22.19.3 சமூகத்தை (Communities) உருவாக்கும் திறனைக் கொண்டுவருகிறது. எனவே, வரவிருக்கும் இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள் ஒவ்வொரு துணைக்குழுவிலும் 512 பங்கேற்பாளர்கள் வரை 10 துணைக்குழுக்கள் (sub-groups) வரை ஹோஸ்ட் செய்யக்கூடிய 'சமூகங்களை' உருவாக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. 

Whatsapp community feature, whatsapp community beta, Whatsapp community feature release date, whatsapp main features, whatsapp community guidelines, whatsapp community update, whatsapp community launch date,  whatsapp community group rules, whatsapp community tab, whatsapp community groups, whatsapp community launch, whatsapp update 2022, whatsapp update new version.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்