Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chat GPT யின் வளர்ச்சி Google காலி செய்துவிடுமுனு பயமாம்....!

Manoj Krishnamoorthi Updated:
Chat GPT யின் வளர்ச்சி Google காலி செய்துவிடுமுனு பயமாம்....!Representative Image.

கூகுளின் பயன்பாடு இன்றைய தினத்தில் அதிகம் என்பதை விட சாதாரணமாக மாறிவிட்டது.  உலகளவில் மென்பொருள் மிகப்பெரிய ஆளுமை கொண்ட கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சிக்கல் பற்றி தெரியுமா.... கூகுளின் எதிர்காலம் என்னாகும் என்பதைப் பற்றி காண்போம். 

கூகுள் டிஜிட்டல் சாம்ராஜ்ஜியத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய அறிமுகமாக வந்துள்ள Chat GPT கூகுளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.  நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உருவாகிய AI Chat GPT, இதன் அறிமுகம் 1 மில்லியன் நபரை குறைந்த நேரத்தில் ஈர்த்தது. இந்த Chat GPT யின் தாக்கம் பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. கூகுளின் தொழில்நுட்பங்களைக் கொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கு இதனால் திக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

அதிகமாக மனித செயல்பாடு இல்லாமலே செயல்படும் Chat GPT  ஜாவா போன்ற கோடிங் முதல் ஆப் தயாரிப்பு வரை அனைத்தும் உருவாக்க உதவும். இதனால் கூகுளின் பயன்பாடு படிப்படியாக குறையும் அவல நிலை ஏற்படலாம். 

நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் இதன் செயல்பாடு உலகம் முழுவதும் பலரைக் கவர்ந்துள்ளது. இன்னும் சொல்ல போனால் நாம்  கேட்கும் கேள்விக்கு எளிமையாக சரியான பதிலை அளிக்கிறது, இது கூகுளில் தற்போது நாம் தேடி படிப்பதை விட மிக எளிமையாக உள்ளது. 

இதுகுறித்து பலர் இந்த Chat GPT யின் வளர்ச்சி கூகுளை காலி செய்துவிடும் எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பால் புச்செய்ட் (Gmail உருவாக்கிய நிபுணர்) கூகுளின் இடத்தை மிக விரைவில் பிடித்துவிடும் எனக் கூறியுள்ளார்.  மிக எளிமையாக கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் AI என்பதால் இது நிச்சயம் வெற்றி கொண்டுவிடும் என்பது கூகுள் நிறுவனத்திற்கு சிக்கல் தான். எனவே, Chat GPT க்கு மாற்றாக பல புதிய திட்டங்களை கூகுள் செயல்படுத்தினாலும் தற்போது இருக்கும் நிலையைத் தக்க வைக்க முடியுமா என்பது எதிர்காலத்தின் கையில் தான் உள்ளது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்