Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கம்ப்யூட்டரில் ஸ்கிரினில் எதனால் ப்ளு லைட் வெளியாகிறது..? | Why Computers emit blue light

Manoj Krishnamoorthi Updated:
 கம்ப்யூட்டரில் ஸ்கிரினில் எதனால் ப்ளு லைட் வெளியாகிறது..? | Why Computers emit blue lightRepresentative Image.

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாடு இன்று அதிகமாக மாறிவிட்டது. இன்றைய டிஜிட்டல் வாழ்வியலில் தொழில்நுட்பம் பயன்பாடு இல்லாமல் இருப்பது கடினமாகும். அதிக நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவர்கள் அதிகமாக கண் சார்ந்த சில தொல்லைகளை அனுபவிப்பர். 

இதற்கு என்ன காரணம் என்றால் கம்யூட்டர் வெளிப்படுத்து ப்ளு லைட் ஆகும். ஆனால் என்றாவது  கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் எதனால் ப்ளு லைட் வெளிப்படுத்துகிறது என்று யோசித்தது உண்டா...? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை தேடி இருப்பீர், இதோ இந்த பதிவின் மூலம் எதனால் ப்ளு லைட் வெளியாகிறது என்பதை அறியலாம். 

 கம்ப்யூட்டரில் ஸ்கிரினில் எதனால் ப்ளு லைட் வெளியாகிறது..? | Why Computers emit blue lightRepresentative Image

இன்றைய டிஜிட்டல் உலகில் கம்ப்யூட்டரை கொண்டு தான் அதிகமான நேரம் செலவிடுகிறோம். இந்த எலக்ட்ரிக் சாதனங்கள் பயன்படுத்தும்போது ப்ளு லைட்டை வெளிப்படுத்துகிறது. இதனால் நம் கண்களுக்கு எரிச்சல் போன்ற பிரச்சனை உண்டாகும். இந்த கண் எரிச்சல் இருந்து பாதுகாக்க நாம் ச்ஸ்டம் கிளாஸ் யூஸ் பண்ணுகிறோம். 

நமக்கு அதிக நேரம் கம்ப்யூட்டர் ஸ்கிரனை பார்ப்பதால் கண் சார்ந்த தொல்லை உண்டாகிறது. ஏனென்றால் நம்முடைய கண் ப்ளு, கிரின், சிவப்பு போன்ற நிறங்கள் நம் மூளைக்கு உடனே ரிஸ்பாண்ட் செய்யும். இதனால் தான் அதிக நேரம் ப்ளு லைட் வெளிப்படுத்தும் கம்யூட்டர் பயன்படுத்துவதால் தான் நமக்கு ஆரோக்கிய தொல்லைகள் உண்டாகிறது.

 கம்ப்யூட்டரில் ஸ்கிரினில் எதனால் ப்ளு லைட் வெளியாகிறது..? | Why Computers emit blue lightRepresentative Image

கம்ப்யூட்டர் ஸ்கிரின் pixel என்ற பல்லாயிர துல்லிய புள்ளிகளைக் கொண்டு உருவானது.  இதில் சிவப்பு, நீலம், பச்சை ஆகிய மூன்று நிறங்களை அடிப்படையாகக் கொண்டு மற்ற நிறங்கள் உருவாகும். ஆனால் இந்த நிறங்களுக்கு தனி வேவ் லென்த் உள்ளது, அதுவே நமக்கு ஒவ்வொரு நிறங்களையும் நம் மூளைக்கு கொண்டு செல்லும்போது வேவ்வெறு நிறமாக மாற்றுகிறது. ப்ளு நிறத்தில் இருந்து வெளிவேறும் சக்தி அதிகமாக இருப்பதால் நம் மூளை மற்றும் கண்களுக்கு அதிக நேரம் பார்பதால் கோளாறு உண்டாகும். 

ஸ்கிரினுக்கு முக்கியமாக தேவைப்படும் முதன்மை நிறங்களில் நீலம் ஒன்று, அது இல்லை என்றால் மற்ற நிறங்களின் சாயல் குறையும். இதனால் க்ம்ப்யூட்டர் ஸ்கிரினில் ப்ளு லைட் இல்லாமல் உருவாக்க முடியாது. 

சிவப்பு நிறத்திற்கு அதிகமான வேவ் லென்த் இருந்தாலும் ப்ளு நிறத்தை போல அதிகமான சக்தியை வெளிப்படுத்தவில்லை. கம்ப்யூட்டர் ஸ்கிரின் அனைத்து நிறங்களையும் வெளிப்படுத்துகிறது.ப்ளு நிறத்தின் கதிர்வீச்சு சக்தி மற்ற நிறங்களை அதிகமாக இருப்பதால் ப்ளு லைட் டாமினட்டாக உள்ளது. 

LCD டிஸ்பிளே அனைத்து நிறங்களையும் அதன் வேவ் லென்த் ஏற்றவாறு பிரதிபலிப்பதால் நம் கண்களுக்கு வித்தியாசம் தெரியாது.   மற்ற நிறங்களை விட ப்ளு கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் மட்டுமே கம்ப்யூட்டர் ப்ளு லைட் வெளிப்படுத்துகிறது என நம்பப்படுகிறது. உண்மையில், அனைத்து நிறங்களும் அதன் முதன்மை நிறங்களின் துணையுடன் ஸ்கிரினில் வெளிப்படும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்