Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெயிட் பண்ணுங்க.. தாறுமாறான போன் வரபோகுது..! - சியோமியின் தரமான சம்பவம்

Chandrasekar Updated:
வெயிட் பண்ணுங்க.. தாறுமாறான போன் வரபோகுது..!  - சியோமியின் தரமான சம்பவம்  Representative Image.

சியோமி நிறுவனம் விரைவில் சியோமி13டி ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் 144ஹெர்ட்ஸ் ரெப்ரேஷ் ரேட், 1300நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. மேலும் இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 ப்ளஸ் சிப்செட் வசதியை கொண்டுள்ளது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ஆண்ட்ராய்டு இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். கேமராவை பொருத்தவரையில், 13எம்பி பின்பக்க கேமரா மற்றும் செல்பிக்காக 32எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொருத்தவரையில், 12ஜிபி,16ஜிபி மற்றும் 256ஜிபி,512ஜிபி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மெமரிக்காக மெமரி கார்டை போட்டுக்கொள்ளலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதயைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 13டி ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்