Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிககுறைந்த விலையில்...அட்டகாசமான அம்சங்களுடன்...Redmi A2 & A2+ ஸ்மார்ட்போன் | Redmi A2 Plus Specifications

Priyanka Hochumin Updated:
மிககுறைந்த விலையில்...அட்டகாசமான அம்சங்களுடன்...Redmi A2 & A2+ ஸ்மார்ட்போன் | Redmi A2 Plus SpecificationsRepresentative Image.

கடந்த மார்ச் மாதத்தில் Redmi A2 மற்றும் Redmi A2+ ஸ்மார்ட்போன் உலகளவில் வெளியிடப்பட்டது. அந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 23 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது. இந்த போனை வாங்க விரும்பினால் Xiaomiயின் அதிகாரப்பூர்வ இந்திய வலைத்தளம், Amazon.in, Mi Home மற்றும் சில்லறை பங்குதாரர்கள் மூலம் விற்பனைக்கு வரும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் 2 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

Redmi A2 மற்றும் A2+ இரண்டுமே ஒரே மாதிரியான மாடல் கொண்டது. மேலும் ரியர்-மௌன்டட் கைரேகை ரீடரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Helio G36 SoC பிராஸசர் உடன் வருகிறது. 6.52 HD+ LCD டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு 5,000mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளன. அவை மைக்ரோ யுஎஸ்பி மூலம் 10W வரை சக்தியைப் பெறுகின்றன. கேமராவைப் பொறுத்த வரையில், பின்புறத்தில் 8MP முதன்மை கேமராக்களைக் கொண்டுள்ளன மற்றும் முன்பக்கத்தில் 5MP செல்ஃபி ஷூட்டர்களைக் கொண்டுள்ளது.

Redmi A2 ஸ்மார்ட்போன் 2GB+32GB மற்றும் 4GB+64GB ஆகிய இரண்டு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களுடன் வருகிறது. அவை ரூ.6,299/- மற்றும் ரூ.7,999/-க்கு விற்பனையாகிறது. Redmi A2+ ஸ்மார்ட்போன் 4GB+64GB வேரியண்ட் ரூ.8,499/-க்கு விற்பனையாகிறது. இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களும் அக்வா ப்ளூ, கிளாசிக் பிளாக் மற்றும் சீ கிரீன் ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்