Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

பட்ஜெட் விலையில் அச்சு அசலாக ஐபோன் டிசைனில் புதிய ரியல்மி நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. தள்ளுபடியும் உண்டு.. | Realme Narzo n53 Price in India

Nandhinipriya Ganeshan Updated:
பட்ஜெட் விலையில் அச்சு அசலாக ஐபோன் டிசைனில் புதிய ரியல்மி நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. தள்ளுபடியும் உண்டு.. | Realme Narzo n53 Price in IndiaRepresentative Image.

பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மி (Realme) அவ்வப்போது புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அதுவும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்வது வழக்கம். தற்போது,  நார்சோ என்3 (Narzo N53) என்ற புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு ஐபோன் 14 டிசைன் போன்றே உள்ள இந்த ஸ்மார்ட்போன் நார்சோ சீரிஸ் போன்களில் மிகவும் மெல்லிய (Slimmest) போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் அச்சு அசலாக ஐபோன் டிசைனில் புதிய ரியல்மி நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. தள்ளுபடியும் உண்டு.. | Realme Narzo n53 Price in IndiaRepresentative Image

டிஸ்ப்ளே & பேட்டரி வசதி:

6.74 இன்ச் HD+ IPS LCD பேனல் டிஸ்பிளே வசதி, 90 ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் டேட் (90Hz refresh rate), 90.3% Screen to Body Ratio, 180HZ டச் சாம்ப்ளிங், 480 நிட்ஸ் பிரைட்னஸ், Uni soc T612 சிப் வசதி, 182g எடை கொண்டது இந்த நார்சோ N53 ஸ்மார்ட்போன். பட்ஜென் விலையில் கிடைக்கிறது என்றாலும், 5000mAh பேட்டரி வசதி, 33W Super VOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வெறும் அரை மணி நேரத்தில் 50% வரை சார்ஜ் செய்துவிடலாம். 

கேமரா & ஸ்டோரேஜ்:

போன் என்றாலே நம்மில் பலருக்கும் முக்கியமான ஒன்றாக இருப்பது கேமரா குவாலிட்டி தான். அந்தவகையில், இந்த நார்சோ ஸ்மார்ட்போனில் 50எம்பி பின்பக்க கேமராவும், 8எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இதில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரு வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில், 2TB வரை ஸ்டோரேஜையும் நீட்டித்துக் கொள்ள முடியும். மேலும், இந்த போனில் 4G வசதி, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் சார்ந்து உருவாக்கப்பட்ட ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) வசதி, 2 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வசதியும் உள்ளது. 

பட்ஜெட் விலையில் அச்சு அசலாக ஐபோன் டிசைனில் புதிய ரியல்மி நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. தள்ளுபடியும் உண்டு.. | Realme Narzo n53 Price in IndiaRepresentative Image

சூப்பர் அம்சம்:

மிக முக்கிய வசதியாக ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மாடல்களில் உள்ள டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) போலவே நோட்டிபிகேஷன் காட்டும் மினி கேப்ஸ்யூல் (Mini Capsule) என்ற அம்சம், 150% அல்ட்ரா பூம் ஸ்பீக்கர் வசதி, சைடு பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமா? பேக் பேனலில் (Back Panel) ஐபோன் சீரிஸின் ப்ரோ மாடல்களில் இருப்பதை போலவே ரியர் கேமரா (Rear Camera) டிஸைனையும் பெற்றுள்ளது.

கலர் & விலை விபரம்:

Feather Gold மற்றும் Feather Black ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் மே 24 முதல் விற்பனைக்கு வருகிறது. விலை பொறுத்தவரை, 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.8,999 மற்றும் ரூ.10,999 என்கிற விலையில் கிடைக்கும். ரியல்மி நார்சோ என்53 போனை, எச்டிஎஃப்சி (HDFC) பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், 4GB + 64GB மாடலுக்கு 750 ரூபாய் சலுகையும், 6GB + 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு 1000 ரூபாய் சலுகையும் கொடுக்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்