Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் இடங்கள் | Famous Pongal Celebrating Places

Priyanka Hochumin Updated:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் இடங்கள் | Famous Pongal Celebrating Places Representative Image.

தை திருநாள் பண்டிகையின் போது அனைவரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மொத்தம் நான்கு நாட்கள் பண்டிகை கொண்டாடப்படும். பொங்கலுக்கு முந்தைய நாளே வீட்டு வாசலில் வண்ண கோலங்கள் போட்டுவார்கள். பொங்கல் அன்று அனைவரும் புத்தாடை அணிந்து, வீட்டின் நிலவு கதவில் மாங்காய் இலையால் தோரணம் கட்டி, சூரிய பகவானை வழிபட்டு, மண் பானையில் பொங்கல் வைப்பார்கள். பின்பு பொங்கலை சூரிய நாகவனுக்கு படைத்ததும் குடும்பம் மொத்தமும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இந்த பொங்கல் பண்டிகையில் நாம் ஏன் விஷேசமாக பொங்கல் கொண்டாடும் ஊர்களுக்கு சென்று பார்வையிட்டு வர கூடாது. இந்த பதிவில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் என்ன விசேஷம் என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் இடங்கள் | Famous Pongal Celebrating Places Representative Image

மதுரை

பொங்கல் என்றால் நாம் எல்லோருக்கும் நினைவில் வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான். வீரம் பிறந்த மண் என்று முன்னோர்களால் சொல்லப்படும் மதுரையில் பொங்கல் பண்டிகை காலங்களில் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பொங்கல் சுற்றுலாத் திருவிழாவானது, மக்களை உற்சாகப்படுத்த பரதநாட்டியம், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். அதே போல நீங்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். மதுரையில் இருக்கும் மதுரை மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கூடல் அழகர் கோயில், திருமலை நாயக்கர் மகால், சமணர் மலை உள்ளிட்ட பிரபல சுற்றுலா தலங்களையும் நம்மால் பார்க்க முடியும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் இடங்கள் | Famous Pongal Celebrating Places Representative Image

தஞ்சாவூர்

சோழ சாம்ராஜியத்தின் அடையாளம் தஞ்சை பெரிய கோவில் இருக்கும் தஞ்சையில் பொங்கல் கொண்டாட்டங்களை காண சுற்றுலாக்கு செல்லலாம். தமிழகத்தின் சுற்றுலா துறை, தஞ்சையிலும் பொங்கல் திருவிழாவை நடத்துகிறது. இந்த பயணத்தில் பொங்கல் நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், மாட்டு வண்டி சவாரி, கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் என்று அனைத்தும் காண்பிக்கப்படும். இதைக் காண உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடும் இடங்கள் | Famous Pongal Celebrating Places Representative Image

சேலம்

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் தனித்துவமானது சேலம். அங்கு பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் "நரி தரிசனம்". சேலம் சுற்றியிருக்கும் கிராமங்களில் மக்கள் பொங்கல் பண்டிகையின் போது காட்டிற்குச் சென்று நரியை பிடித்து வருவார்கள். கோலாகலமாக வழிபாடு முடிந்த உடன் நரியை காட்டிற்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று பசு, காளை மாடுகளை வழிபடுவார்கள். மேலும் ஊத்துமலை, 1008 லிங்கம் கோயில், காலங்கி சித்தர் கோயில், குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா, மூக்கனேரி ஏரி ஆகியவை சேலத்தில் இருக்கும் முக்கியமான சுற்றுலா இடங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்