Mon ,Sep 26, 2022

Exclusive

Best Place to Visit Maldives in Tamil: மனதை மயக்கும் மாலத்தீவு…! அதிலும் இந்த இடத்துக்கு போனா திரும்ப வரவே மனசு வராது…!

Gowthami Subramani June 27, 2022 & 20:00 [IST]
Representative Image. Representative Image.

Best Place to Visit Maldives in Tamil: உலகில் உள்ள அதிசயங்களைக் காண நமக்கு எத்தனை நாள்கள் ஆனாலும் போதாது. அவ்வாறு நிறைய இடங்கள் காண்போரை வியக்க வைப்பவையாக இருக்கும். அந்த வரிசையில் மாலத்தீவும் ஒன்று. மாலத்தீவை சொர்க்கம் என்றும் சில பேர் கூறுவர் (Maldives Tourism in tamil). புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் தேன் நிலவு செல்வதற்கு ஏற்ற இடமாகவும் மாலத்தீவு உள்ளது. அது மட்டுமல்ல, குடும்பத்தோடு செல்வதற்கும் ஏற்றவாறு நிறைய இடங்கள் உள்ளன. அந்த வகையில், மாலத்தீவில் உள்ள டாப் 5 இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம் (Best Place to Visit Maldives in Tamil).


மாலத்தீவில் காண்போரை ஈர்க்கும் 5 இடங்கள் (Top 5 tourist attractions in Maldives)


COMO கோகோ தீவு

மாலத்தீவு எதனால் சூழ்ந்தது என்பதை அதன் பெயரை வைத்தே அறிய முடியும். அந்த வகையில், எத்தனை அழகான தீவுகளைக் கொண்டதாக மாலத்தீவு அமைந்துள்ளது. ஆனால், எத்தனை தீவுகள் பெருமை வாய்ந்ததாக இருப்பினும், இந்த அதிர்ச்சியூட்டும் COMO கோகோ தீவு இல்லாமல் தீவுக்கூட்டத்தின் சிறப்பு முழுமையடையாது. இந்த தீவு புது விதமான புத்துணர்ச்சியைத் தரவல்ல ஒரு தீவாகக் கருதப்படுகிறது.

A picture containing reef, nature, swimming, ocean floor

Description automatically generated

5-Star வசதியுடன் காணப்படும் இந்த இடம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக அமையும் ஒரு சிறந்த இடமாகும். இந்த பகுதியில் உள்ள மணல், கரைகள் ஆகியவை நம்மை கவர்ந்திழுக்குமாறு அமைந்துள்ளது (Places to visit in Maldives for family).

அட்டு அட்டோல் (Addu Atoll)

மாலத்தீவில் உள்ள இந்த அட்டு அட்டோல் சீனு அட்டோல் எனவும் அழைக்கப்படுகிறது. இது மாலத்தீவில் தெற்கே உள்ள அட்டால் ஆகும். இந்த பகுதி தீவு உட்பட எண்ணற்ற நன்கு அறியப்பட்ட மற்றும் அழகான தீவுகளை உள்ளடக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த தீவுகள் ஒவ்வொன்றுமே அடர்த்தியாக மூடப்பட்டிருக்கும். மேலும், இது நிழல் தரும் தென்னை மரங்களை வரிசையாகக் கொண்டிருக்கும் (Best places in Maldives for Honeymoon).

An aerial view of an island

Description automatically generated with medium confidence

இந்த பகுதியில், டைவிங், மீன் பிடித்தல் போன்ற செயல்கள் நடக்கும். இதனால், இது ரசிகர்களின் மனதைக் கவரக் கூடிய இடமாக உள்ளது. பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும், உள்ளூர் கிராமங்களுக்குச் சென்று, அந்த பகுதியில் வாழும் பழங்குடியினருடன் பழகுவதையே விரும்புவர். இதனால், இந்த பகுதி முழுவதும் அவர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரக் கூடியதாக அமையும்.

செயற்கைக் கடற்கரை

நார்த் மேல் அட்டோலில் அமைந்துள்ள செயற்கைக் கடற்கரை, காண்பவரை தன் வசம் ஈர்த்து, ஒரு மாறுபட்ட நினைவூட்டும் இடமாக உள்ளது. இது மாலத்தீவில் பார்க்கக் கூடிய அழகான மற்றும் அமைதியான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த கடற்கரையில் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்த்தப்படும். நீர் விளையாட்டுகளை விளையாட ஆர்வத்துடன் இருப்பர் (Things to Do in Maldives).

A picture containing water, resort, reef, shore

Description automatically generated

இந்த கடற்கரையின் மாலை நேரங்களில் வீசப்படும் காற்றில், இசைக் குழுக்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, அந்த கடற்கரை முழுவதும் ஒரு மயக்கும் இடமாக விளங்கும். இந்தக் கடற்கரையில் ஷார்க் பாயிஸ்ட், கனி கார்னர் போன்ற இடங்கள் முக்கியமாக இடங்களாகக் கருதப்படுகின்றன.

தி முரகா – கான்ராட்

கான்ராட் மாலத்தீவு பகுதியின் ரிசார்ட்டில் அமைந்துள்ள முராகா, ஒரு ஆடம்பரமான கடலுக்கடியில் இருக்கும் இடமாகும். இந்த இடத்தில் இருக்கும் போது, இந்திய பெருங்கடலின் நீல நிற நீரின் கீழே வாழக் கூடிய ஒரு அனுபவத்தைப் பெறலாம். இந்த குடியிருப்பில் தங்குவதற்கு மிகுந்த ஆவலுடன் இருப்பர். இது தங்குமிடமாக மட்டுமல்லாமல், திகைப்பூடும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது (Maldives Tour in Tamil).

A boat on the water

Description automatically generated with low confidence

இங்கு பலவிதமான வசதிகளும் கிடைக்கும். இந்த இடம் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அனுபவிக்க முடியும். இதில் சில நீர் விளையாட்டுகளான டைவிங், ஜெட் ஸ்கீயிங் போன்றவை அனுமதிக்கப்படுகின்றன (Top Tourist Attraction Mn maldives).

A picture containing text

Description automatically generated

வாழைப் பாறை

மாலத்தீவில் கண்கவர் இடமாக விளங்குவது வாழைப் பாறை இடமும் ஒன்று. இதன் கம்பீரமான பாறைகள் மற்றும் அழகான குகைகள் மாலத்தீவின் ஒரு அலக்கரிக்கப்பட்ட பழமையான திட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பகுதியில், சுறாக்கள் மற்றும் இன்னும் பிற நீர் வாழ் உயிரினங்கள் வசிக்கும்.

இந்த அமைதியான நீரோட்டம் டைவர்ஸூக்குச் சரியாக இடமாக உள்ளது. நீரின் வெப்பநிலையும் 24 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இணக்கமாக இருக்கும். இந்த இடத்திலும் நீர் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன (Secret Places in Maldives).

A picture containing variety, ocean floor

Description automatically generated

இந்த அனைத்து இடங்களுமே காண்போரை வியக்க வைப்பவையாகவும், அவர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தைத் தரக் கூடியவையாகவும் அமையும். மாலத்தீவு செல்பவர்கள், இந்த இடத்திற்கெல்லாம் தவறாமல் சென்று வாருங்கள் (Places to Visit in Maldives for Couples)…

இந்த இடங்களைத் தவிர மாலத்தீவில் காண, இன்னும் ஏராளக்கணக்கான இடங்கள் உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tag: Best Place To Visit Maldives In Tamil | Places To Visit In Maldives For Family | Top 5 Tourist Attractions In Maldives | Best Places To Visit Maldives In Tamil | Maldives Tourism In Tamil | Maldives Tour In Tamil | Maldives Tour In Tamil Nadu | Things To Do In Maldives | Secret Places In Maldives | Top 5 Tourist Attractions In Maldives | Best Places In Maldives For Honeymoon | Places To Visit In Maldives For Couples.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts