Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Worlds Highest Statue: அம்மாடியோ! உலகத்துலயே பெரிய சிலை இந்த சிலையா? அன்னாந்து பாத்தா கழுத்தே வலிக்கும் போலயே!

Gowthami Subramani April 16, 2022 & 17:00 [IST]
Worlds Highest Statue: அம்மாடியோ! உலகத்துலயே பெரிய சிலை இந்த சிலையா? அன்னாந்து பாத்தா கழுத்தே வலிக்கும் போலயே!Representative Image.

Top 10 Highest Statue in World: உலக அளவில் ஒப்பிடும் போது, மிக அதிக அளவிலான உயரம் உடைய சிலை இந்தியாவில் தான் உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு இத்தகைய சிறப்பு மிக்க பெருமை சேர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிறிது காலத்திற்கு முன் நிறுவப்பட்ட முருகர் சிலை தான் பெரிதாக உள்ளது. இந்த அனைத்து நினைவுச் சின்னங்களும் வரலாற்றின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க சிலைகளில் நம் இந்தியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை முதலிடத்தில் இருப்பது நமக்கு பெருமை சேர்த்துள்ளது. இது போன்ற உலக அளவில் மிகப் பெரிய அளவிலான சிலைகளின் பட்டியல்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

ஒற்றுமையின் சிலை (Statue of Unity)

இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலைத் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள். இவர் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக ஆட்சி வகித்தவர். மேலும், நாட்டின் உள்துறை அமைச்சராகவும் விளங்கினார்.

மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்றால், ஒருங்கிணைந்த இந்தியாவாக மாற்றிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேல் ஐயாவைச் சேரும். இவருடைய ஆட்சிக் காலத்தில் 500 க்கும் மேற்பட்ட பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர். இத்தகைய சிறப்பு மிக்க மனிதரை பெருமைப் படுத்தும் விதமாக, நம் நாட்டின் பிரதமர் மோடி திரு. நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை ஆற்றின் நடுவில் 597 அடி அளவிலான உயரத்தில் மாபெரும் சிலையை நிறுவியுள்ளார். இதுவே, உலக அளவில் மிகப் பெரிய சிலையாகக் கருதப்படுகிறது.

A person standing on a bridge

Description automatically generated with low confidence

சிலையின் உயரம்: 182 மீட்டர் (597 அடி). அடித்தளம் உட்பட: 240 மீட்டர் (790 அடி) (World Highest Statue)

சிலை நிறுவப்பட்ட இடம்: நர்மதா மாவட்டம், குஜராத் மாநிலம், இந்தியா

சிலை துவங்கப்பட்ட நாள்: 31, அக்டோபர் 2018

புத்தர் வசந்த கோவில் (Spring of Buddha)

சீனாவில் வரலாற்றுக் காவியமாகத் திகழும் புத்தரின் வசந்த கோவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சிலையாகும். சீனாவில் இருக்கும் இந்த மாபெரும் சிலை சுமார் 18 மில்லியன் டாலர்கள் கொண்டு நிறுவப்பட்டது. மேலும், இந்த சிலை 1000 டன் எடை கொண்ட 1,100 செப்பு வார்ப்புகளைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஒரு சிறிய தலைகீழ் ஸ்வஸ்திகா இந்த சிலையின் மார்புக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.

A picture containing text, sky

Description automatically generated

சிலையின் உயரம்: 128 மீட்டர் (420 அடி) உயரம் அடித்தளம் உட்பட: 208 மீட்டர் (682 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: ஜாக்கோன் நகரம், லூஷான் கவுண்டி, சீனா

சிலை துவங்கப்பட்ட நாள்: 1997 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை

Most Read: நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்த இடங்கள்… இந்த இடத்துக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?

லெய்யுன் செக்கியா (Laykyun Sekkya)

உலகின் மூன்றாவது மிகப் பெரிய சிலையாகக் கருதப்படுவது அதே சீனா நகரத்தில் உள்ள லெய்யுன் செக்கியா புத்தர் சிலை. பெரும்பாலும், நம் அனைவரும் அறிந்த ஒன்று புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார் என்பது (The World Highest Statue). தங்க நிறத்தில் பிரதிபலிக்கும் இந்த சிலை கௌதம புத்தரின் சிலை ஆகும். இந்த சிலை நாட்டின் புத்த மையமாகக் கருதப்படுகிறது. லேக்கியுன் செக்கியாவின் மிகச் சிறப்பு என்னவென்றால், இந்த சிலைக்குப் பக்கத்தில் இன்னொரு சில சுற்றி தோட்டம் உள்ளவாறு படுத்திருக்கும். இது மேலும் இந்த சிலைக்கு அழகூட்டுகிறது.

A picture containing text, sky, yellow, place of worship

Description automatically generated

சிலையின் உயரம்: 116 மீட்டர் (381 அடி) அடித்தளம் உட்பட்: 129.2 மீட்டர் (424 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: கட்டகன் டவுங், மோனிவாவுக்கு அருகில், மியான்மர்

சிலை துவங்கப்பட்ட நாள்: 1996 ஆம் ஆண்டு தொடர்ந்து 12 வருடங்கள் கட்டப்பட்டது. அதிகாரப்பூர்வமாக சிலை அறிவிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 2008.

உஷிகு டைபுட்சு (Ushiku Daibutsu)

ஜப்பானின் இபராகி ப்ரிபெக்சர், உஷிகுவில் அமைந்துள்ள இந்த சிலையின் பெயர் உஷிகு டைபுட்சு என்பது. இது 1993 ஆம் ஆண்டு  10 மீட்டர் மற்றும் 10 மீட்டர் தாமரை தளம் என மொத்தம் 120 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை ஜப்பானின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அமிதாபா புத்தரை சித்தரிக்கிறது இந்த சிலை. காண்போரை கவரும் வண்ணம் அமையும் இந்த சிலை வெண்கலத்தால் ஆனது எனக் கூறப்படுகிறது. இது உலகளவில் நான்காவது மிகப் பெரிய சிலையாகக் கருதப்படுகிறது.

A collage of a statue

Description automatically generated with low confidence

சிலையின் உயரம்: 100 மீட்டர் (330 அடி) அடித்தளம் உட்பட: 120 மீட்டர் (390 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: உஷிகு, இபராக்கி, ஜப்பான்

சிலை துவங்கப்பட்ட நாள்: 1993

ஷென்டாய் நியோ கண்ணோன் (Sendai Daikannon)

ஜப்பானின் சென்டாய் நகரில் உள்ள செண்டாய் டைகன்னோன் சிலை நியோரின் கண்ணன் வடிவத்திலான சிலையாகக் கருதப்படுகிறது. இது உலகில் உள்ள முதல் 10 உயரமான சிலைகளில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் மக்களால் போற்றப்படும் ஒரு தெய்வீக சிலைகளில் ஒன்றாகும். மேலும், போதிசமத்துவர் கண்ணனை சித்தரிக்கும் வகையில், ஓர் பிரம்மாண்டம் நிறைந்துள்ளது. அதன் படி, சிலையின் உச்சியில் பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்கான லிப்ட் வசதி உள்ளது. இதன் மூலம் ஜப்பானில் மக்கள் மிகுந்த அளவிலான பாரம்பரியத்தைப் போற்றுகின்றனர் என்பது தெரிகிறது.

A picture containing text, sky, tree

Description automatically generated

சிலையின் உயரம்: 100 மீட்டர் (330 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: சென்டாய், ஜப்பான்

சிலை துவங்கப்பட்ட நாள்: 1991

குய்ஷன் குவான் (Qianshou Qianyan Guanyin of Weishan)

உலக அளவில் 6 ஆவது மிகப் பெரிய சிலையாகவும், சீனாவில் 4 ஆவது மிகப் பெரிய சிலையாகவும் கருதப்படுவது குய்ஷன் குவான் சிலை ஆகும். இது புத்தர்களின் கருணையைப் போற்றக் கூடிய போதிசத்துவரை சித்தரிப்பதாக உள்ளது. ஆயிரம் கைகள் மற்றும் கண்கள் உடையதாகக் காணப்படுகிறது. இது அவலோகிதேஸ்வரரை சித்தரிக்கிறது. சீன மக்கள் குடியரசுப் பகுதியில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த அழகிய சிலை, குவோனின் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சித்தரிப்புகள் காண்போரை வியக்கும் வண்ணம் உள்ளது.

A picture containing sky, outdoor, place of worship

Description automatically generated

சிலையின் உயரம்: 99 மீட்டர் (325 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: வெய்ஷன், சாங்ஷா, ஹூனான், சீனா

சிலை துவங்கப்பட்ட நாள்: 2009

தி பிக் புத்தர் தாய்லாந்து (Great Buddha of Thailand)

தி பிக் புத்தர் எனப் போற்றப்படும் இந்த சிலையை தாய்லாந்தின் பெரிய புத்தர் என்று அழைப்பர். மேலும், இந்த சிலை ஃபிரா புத்த மகா நவமின் என்றும், மஹாமின் சாகாயமுனி என்றும் போற்றப்படும். தாய்லாந்து நாட்டில் உள்ள மிகப் பெரிய சிலைகளில் இது முதலிடத்தை வகிக்கிறது. இதன் கட்டுமானப் பணிகள் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு, 2008 -ல் நிறைவடைந்தது. இந்த சிலை தாய்லாந்தின் மன்னரான பூமிபோலை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதாகும். மேலும், இது ஹாங்காங் மாகாணம், தாய்லாந்தின் புகழைப் பறைசாற்றுபவையாக உள்ளது.

A picture containing text, yellow

Description automatically generated

சிலையின் உயரம்: 92 மீட்டர் (302 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: வாட் முவாங், வைசெட் சாய் சான், ஆங் தாங், தாய்லாந்து

சிலை துவங்கப்பட்ட நாள்: 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை

கிட்டா நோ மியாகோ பூங்காவின் டேய் கண்ணன் (Hokkaido Kannon)

உலகின் மிக உயரமான சிலைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹொக்கைடோ கண்ணன் சிலை கிடாநோ மியாகோ பூங்காவின் டாய் கண்ணன் சிலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிலை உலக அளவில் 8 ஆம் இடத்திலும், ஜப்பான் நாட்டைப் பொறுத்த வரை மூன்றாவது இடத்திலும் இருக்கும் மிகப் பெரிய சிலையாகும். இதன் கட்டுமானம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதன் ஓர் சிறப்பு என்னவென்றால், பார்வையாளர்கள் ரசிக்க சுற்றுப்புறத்தின் கண்கவர் காட்சிகளை வழங்கும் மேடையையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சிலையில் 20 தளங்களுக்கு மேல் லிப்ட் வசதியும் உள்ளது (Top 5 Latest Statue in The World).

A large statue in a park

Description automatically generated with low confidence

சிலையின் உயரம்: 88 மீட்டர் (289 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: அஷிபெட்சு, ஹொக்கைடு, ஜப்பான்

சிலை துவங்கப்பட்ட நாள்: 1975-1989

ரோடினா மேட் ஜோவ்யாட் (The Motherland Calls)

இந்த சிலை ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் மிக உயரமான சிலையாகக் கருதப்படுகிறது. இது ஒரு பெண்ணின் மிக உயரமான சிலையாகும். இந்த சிலையில் ஒரு பெண் வாளேந்தி என்னை நெருங்காதே என்று கூறியது போல் தோற்றமளிக்கிறது. இது தாய்நாட்டின் உருவப்படமாக உள்ளது. மேலும், இந்த சிலை தனது மகன்களையும், மகள்களையும் காப்பாற்றுவதற்காக எதிரிகளை விரட்டியடிப்பது என்ற பொருளை எடுத்துரைக்கிறது இந்த சிலை. இதைச் சுற்றியுள்ள மரங்கள், புல்வெளிகள் காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

A statue of a person holding a sword on a grassy hill with a city in the background

Description automatically generated with medium confidence

சிலையின் உயரம்: 85 மீட்டர் (279 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: மாமேவ் குர்கன், வோல்கோகிராட், ரஷ்யா

சிலை துவங்கப்பட்ட நாள்: 1967 ஆம் ஆண்டு சமயம்

அவாஜி கண்ணன் (Awaji Kannon)

இந்த சிலையின் பொருளை பெயரிலேயே எல்லோரும் அறிவர். அவாஜி கண்ணன் என்பவரை நினைவு கூறும் வகையிலே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டில் உள்ள ஹியோகா ப்ரிபெக்சர் என்ற இடத்தில் உள்ளது. இந்த சிலை டொயோகிச்சி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையில் சுமார் 20 மீட்டர் உயரமுள்ள 5 மாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் ஆறாவது மாடி கண்காணிப்பு தளமாக உள்ளது.

A picture containing text, automaton

Description automatically generated

சிலையின் உயரம்: 80 மீட்டர் (260 அடி)

சிலை நிறுவப்பட்ட இடம்: அவாஜி ஐஸ்லாந்து, ஜப்பான்.

சிலை துவங்கப்பட்ட நாள்: 1977

இத்தகைய உலகிலேயே மிகப் பெரிய சிலைகளின் பட்டியல்களில் பார்த்திருப்போம். இதில் முக்கியமாக ஒன்று கருதப்பட்டது என்னவென்றால், உலகிலேயே மிகப் பெரிய சிலை என முதலிடத்தில் வகிப்பது நமது இந்திய நாட்டில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை. அந்த அளவுக்குப் பெருமை வாய்ந்த நமது இந்தியாவைப் பற்றிச் சொல்வதற்கு எத்தனை நாள்கள் ஆனாலும் போதாது. இத்தகைய அதிசய இடங்களைக் காண்பதற்கு எல்லோரும் மிக ஆவலுடன் உள்ளனர்.

Most Read: Highest Statue in India: பாரதத்தின் பிரமாண்டமான 10 சிலைகள்!.. கோடை சுற்றுலா ஸ்தலம்!….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்