Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Bermuda Triangle Tour:  அழகும் ஆபத்தும் நிறைந்த உலகின் மர்ம தீவு பற்றிய அறியாத உண்மைகளும் சூப்பரான ஆஃபரும்…!!

Nandhinipriya Ganeshan May 29, 2022 & 10:27 [IST]
Bermuda Triangle Tour:  அழகும் ஆபத்தும் நிறைந்த உலகின் மர்ம தீவு பற்றிய அறியாத உண்மைகளும் சூப்பரான ஆஃபரும்…!!Representative Image.

Bermuda Triangle Tour: பெர்முடா முக்கோணம் என்பது அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 7 லட்சம் கி.மீ பரப்பளவில் இருக்கும் ஒரு அழகிய தீவாகும். அதே அளவு இதில் ஆபத்தும் பல மர்மமும் நிறைந்திருக்கிறது. அமெரிக்காவின் மியாமி, கரீபிலுள்ள புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் பெர்முடா தீவு ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் இந்த தீவை டெவில்ஸ் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த தீவு பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாகச ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. உலகில் மர்மம் சூழ்ந்திருக்கும் திரில்லான இடங்களில் இதுவும் ஒன்று.  ஏனெனில், பல கப்பல்கள் அந்த இடத்தில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. 

70 ஆண்டுகால மர்மம்:

அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் இந்த பகுதியில் பல விவரிக்க முடியாத் நிகழ்வுகள், பல விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆராய்ச்சிக்காக அனுப்பட்ட பொருட்கள், விமானங்கள், ஏராளமான கப்பல்கள், பறவைகள் என அனைத்தும் மாயமாகிவிடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த மர்மம் 70 ஆண்டுகளுக்கு (Mystery of Bermuda Triangle in Tamil) மேல் நீடித்து வருகிறது. பெர்முடா முக்கோணத்திற்கு வரும்போது, ஒன்று நிச்சயம், பதில்களை விட அதிகமான கேள்விகள் உள்ளன.

1000 பேரை காவு வாங்கிய பெர்முடா:

இதுவரை இந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேப்போல் விமானத்தில் பறக்கும் போது விமானமும் இந்த பகுதியில் செல்லும்போது கீழே விழுந்து நீரில் மூழ்கிவிடுகிறதாம். இதற்கான காரணங்களை கேட்டபோது சிலர் அங்கு கடல் அரக்கர்கள் இருப்பதாகவும், ஏற்கனவே மூழ்கிய கப்பலில் இறந்தவர்களின் பேய்கள் தான் என்றும், இன்னும் பலர் அங்கு வேற்றுகிரகவாசிகள் தான் இந்த மாதிரி செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். 

சம்மர் சீசன் வந்தாச்சு… அடுத்தது என்ன குளுகுளுனு டூர் தான்… உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற பெஸ்ட் ஹில் ஸ்டேஷன்…!

மாயமான கப்பல்கள்:

1800 ஆம் ஆண்டு மேரி செலஸ்டே என்பவர் அட்லாண்டிக் முழுவதும் சுற்றிப் பார்க்க முடிவு செய்து, இத்தாலியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ஆனால், இந்த மர்ம பெர்முடா முக்கோணத்தின் வழியாக செல்லும் போது அது மாயமாகிவிட்டதாம். பிறகு, கப்பல் புறப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஆய்வு செய்தலில் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுகள் இருந்ததாம். ஆனால், அதில் ஒரு லைஃப் படகை மட்டும் காணவில்லையாம். இது ஒரு மர்மம். 

அதேபோல், 1918 இல் USS சைக்ளோப்ஸ் காணாமல் போனதன் மூலம் புராணக்கதை வலுப்படுத்தப்பட்டது, இது அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய கப்பலானது, அது ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது. இதுவரை அந்த இடத்தில் மட்டும் ஐம்பது கப்பல்கள் மற்றும் இருபது விமானங்கள் காணாமல் போய் இருக்கிறதாம். ஆனால், இந்த பகுதியில் பல சரக்கு கப்பல்கள் கடந்து சென்றிருக்கின்றன. அவற்றிற்கு இதுவரை எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மட்டுமே மாயமாகியதாக கூறுகிறார்கள். 

ஆஸ்திரேலிய விஞ்ஞானி:

இதனால், பல விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அங்கு பல ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அவர்களின் கருத்துபடி, பெர்முடா முக்கோணத்தில் அதிகளவிலான புவி ஈர்ப்பு சக்தி இருக்கலாம் என்றும் அதன் காரணமாக தான் விமானங்கள் கப்பல்களை உள் இழுத்துக்கொள்வதாகவும் தெரிவித்து வந்தனர். ஆனால், பெர்முடா முக்கோணத்தை பற்றி தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்ல் க்ரூஸ் செல்னிகி, அங்கு எந்த மர்மமும் இல்லை என்றும், அப்பகுதியில் இதுவரை நடந்த மர்மங்களுக்கு மோசமான வானிலையும், விமானிகள் அல்லது கப்பல் ஓட்டுபவரின் பிழைகளுமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 

ஒரு சூப்பரான டிரிப்:

அதன்படி நேற்று இந்த ஆபத்தான பெர்முடா முக்கோணத்தை கடக்கும்போது தங்கள் சொகுசு கப்பல் காணாமல் (ancient mysteries cruise ship) போனால் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை மீண்டும் அவர்களிடமே திருப்பி தரப்படும் என அமெரிக்கா நிறுவனம் (ancient mysteries cruise) அறிவித்துள்ளது. இது ஆஃபர் இணையத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.  

குமரியில் ஒரு குட்டி மாலத்தீவு...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்