Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

Famous Places In Russia: ரஷ்யாவின் அழகைப் பாருங்க! கண்ணை பறிக்கும் அழகான இடங்கள்!

Nandhinipriya Ganeshan February 26, 2022 & 18:00 [IST]
Famous Places In Russia: ரஷ்யாவின் அழகைப் பாருங்க! கண்ணை பறிக்கும் அழகான இடங்கள்!Representative Image.

Famous Places In Russia: உலகின் மிகப்பெரிய நாடு உண்மையிலேயே அனைத்தையும் கொண்டுள்ளது - பரந்த விரிந்த மலைகள், பள்ளத்தாக்குகள், வெண்மை போர்வை போர்த்திய பனிப்பிரதேசங்கள், கண்ணை ஈர்க்கும் கட்டிடக்கலை வளம், மற்றும் நம்பமுடியாத எண்ணிக்கையிலான அற்புதமான இயற்கை இடங்கள்.

இதுமட்டுமில்லை, அங்குள்ள கம்பீரமான பூங்காக்கள், ஷாப்பிங் சென்டர்கள், மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை போன்றவையும் ரஷ்யாவின் அழகை உயர்த்திக் காட்டுகிறது. இப்போது சோச்சி முதல் செயிண்ட் அரண்மைகள் வரை, ரஷ்யாவில் பார்க்க வேண்டிய அற்புதமான இடங்களின் (russia places to visit) பட்டியலைப் பார்ப்போம்.

சோச்சி (Sochi)

 

 

"பீச் ரிசார்ட்" என்று அழைக்கப்படும் சோச்சி, காகசஸ் மலைகளின் (Caucasus Mountains) அடிவாரத்தில் கருங்கடலில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். 2014 ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பிறகுதான் அந்த இடம் பிரபலமாக மாறினாலும், அதற்கு முன்பே சோச்சி ரஷ்யர்களின் விருப்பமான மற்றும் சிறந்த விடுமுறை இடமாகவே இருந்தது.

இங்கு குளிர்காலத்தில் பொழியும் பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், அதனால் ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாட்டை விளையாடி அங்கு தான் நேரத்தை செலவிடுவார்கள். மேலும், ஸ்டாலினின் டச்சா, மவுண்ட் அகுன், வொரொன்சோவ்கா குகைகள், ரோசா குடோர் ஸ்கை ரிசார்ட், ஒலிம்பிக் பூங்கா மற்றும் ரிவியரா டால்பினேரியம் (ரஷ்யாவின் மிகப்பெரிய மீன்வளம்) ஆகியவை சோச்சியில் உள்ள பிரபலமான சில இடங்கள்.

பார்வையிட சிறந்த நேரம்: மே - அக்டோபர்

பைக்கால் ஏரி (Lake Baikal, Siberia)

 

 

சைபீரியா காடுகளில் அமைந்துள்ள பைக்கால் உலகின் மிக ஆழமான ஏரி மட்டும் அல்ல, ரஷ்யாவின் அழகான மற்றும் தூய்மையான இடமும் கூட. வசீகரிக்கும் நிலப்பரப்பை கொண்ட பைக்கால் ரஷ்யாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று. அங்கு ஏரி உறைந்தவுடன் அதிக அளவு ஆக்ஸிஜன் இருப்பதால் அது அழகான பனிப்பொழிவுகளை உருவாக்குகிறது. அந்த நேரத்தில் போனால் மகிழ்ச்சியின் உச்சம்தான். பனிப்பொழிவுகளில் விளையாட யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும். 

கிழி (Kizhi)

 

 

ரஷ்யாவின் வடக்கே கரேலியா குடியரசில் உள்ள ஒனேகா ஏரியின் மையத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் அமைதியான தீவு. அதுமட்டுமல்லாமல், இது ரஷ்யாவில் 18 ஆம் நூற்றாண்டின்  வாழ்க்கையை பற்றி பார்வையாளர்களுக்கு கற்பிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியமும் கூட. ஒருவேளை நீங்க கிழிக்குச் சென்றால் இந்த நகரத்தின் வழியாக நடந்து சென்று பழமையான ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கை, மதம், பொழுதுபோக்கு, மற்றும் குடும்பங்களைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம். கிழி ரஷ்யாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று.

மாஸ்கோ, சிவப்பு சதுக்கம் (Red Square, Moscow)

 

 

மாஸ்கோவின் மையத்தில் உள்ள Red Square ரஷ்யாவில் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் ஒன்று. பழைய ரஷ்யாவில் 'சிவப்பு' என்ற வார்த்தைக்கு 'அழகானது' என்று பொருள் உண்டு. அதனால் தான் இது சிவப்பு சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் அழகான தேவாலயங்கள், அருங்காட்சியங்கள், மற்றும் அரசாங்க கட்டிடங்கள் உள்ளன.

இதன் அழகான மற்றும் வண்ணமயமான கட்டிடக்கலையால் எல்லா இடங்களில் இருந்தும் சுமார் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்களாம். மேலும், செயின்ட் பாசில் தேவாலயம், கசான் தேவாலயம், தி ஐபீரியன் கேட், கிரெம்ளின் சுவர், மினின் மற்றும் போசார்ஸ்கி சிலை, லெனின் கல்லறை, ஸ்டேட் ஹால் மியூசியம் மற்றும் சிட்டி ஹால் ஆகியவை அங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

மான்புபுனர் பாறை (Manpupuner Rock Formations)

 

 

ரஷ்யாவில் பார்க்க வேண்டிய கண்கவர் இடங்களில் மான்புபுனர் பாறைகளும் ஒன்று. இந்த பாறைகள் முதலில் பார்க்கும் போது வேற்றுகிரகவாசிகளின் போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால், அது உண்மையில் யார் என்று யாருக்கும் தெரியாது... சிலர் இது இயற்கையின் சில செயல்பாடுகளால் உருவானதாக சொல்கிறார்கள். இன்னும் சிலர் ஆன்மீக காரணங்களுக்காக முன்னோர்களால் கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள். இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இன்னும் சிலர் அந்த இடத்தை ஆவிகள் சந்திக்கும் இடமாகவும் கருதுகின்றனர்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Peterburg)

 

 

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், சிவப்பு சதுக்கத்தைப் போலவே முற்றிலும் கட்டிடக்கலையால் ஜொலிக்கும் இடமாகும். இது மாஸ்கோவை விட சிறியதாக இருந்தாலும்,  பெரிய பூங்காக்கள், அற்புதமான தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அரண்மனைகள் போன்றவை இந்த நகரத்தை அலங்கரிக்கின்றன.

இதை எல்லாவற்றையும் ஒரே நாளில் பார்வையிட முடியும் என்றால் அது நடக்காத காரியம். மாஸ்கோவுடன் ஒப்பிடும்போது, ​​செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அதிக ஐரோப்பிய-நுண்கலை மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு என்று ஒவ்வொரு மூலையிலும் வரலாற்றில் கலக்கிவருகிறது. மேலும், ஹெர்மிடேஜ் மியூசியத்துடன் ஒப்பிடும் போது செயின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உலகின் இரண்டாவது பெரிய கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது.

பார்வையிட சிறந்த நேரம்: ஜூன் முதல் ஆகஸ்ட் வரை

கசான் (Kazan)

 

 

பெரும்பாலான இந்திய பெருநகரங்களைப் போலவே, கசானிலும் பலதரப்பட்ட மதங்கள் மற்றும் கலாச்சாரம் கொண்ட மக்கள் வசித்துவருகிறார்கள். யுனெஸ்கோவால் வரலாற்று தளமாக அறிவிக்கப்பட்ட கசான் கிரெம்ளினைப் பார்க்க ஏராளமான பயணிகள் கசானுக்கு வருகிறார்களாம். 

இதுமட்டுமல்ல, இன்னும் ஏராளமான கண்கவர் இடங்கள்  மற்றும் சுற்றுலா தலங்கள் (russia tourist places) இங்கு நிறைந்திருக்கின்றன. ஒரு முறையாவது வாய்ப்புக் கிடைத்தால் இந்த இடங்களுக்கு எல்லாம் கண்டிப்பாக போட்டு வாருங்கள்!!

இதுபோன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள Search Around Web என்ற Tamil வலைதளப்பக்கத்தை தொடர்ந்திருங்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்