Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,012.05
-736.37sensex(-1.01%)
நிஃப்டி21,817.45
-238.25sensex(-1.08%)
USD
81.57
Exclusive

ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா மெதுவா......வாங்க நடந்தே உலகை சுற்றலாம்..!

Bala July 12, 2022 & 16:18 [IST]
ஆகட்டும்டா தம்பி ராஜா  நட ராஜா மெதுவா......வாங்க நடந்தே உலகை சுற்றலாம்..!Representative Image.

காதலை போலத்தான், பயணங்களுக்கும்  தடைகள் எதுவும் இல்லை என்பதை இந்த சாலை  சுட்டிக்காட்டுகிறது. உலகை சுற்ற விலை உயர்ந்த வாகனங்களோ, விமானங்களோ, கப்பல்களோ தேவை இல்லை, கடைசி வரை இரண்டு கால்களே போதும்.. ஆம்..உலகின் மிக நீண்ட தூரம் நடந்தே செல்லக்கூடிய சாலையை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்...

உலகின் மிக நீண்ட தூரம் நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன

தூரம் 22,387 கிமீ மற்றும் மொத்த பயண நேரம் 4492 மணிநேரம் ஆகும்.

இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள் வழியில், 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு ஆண்டின் அனைத்து பருவங்களையும்  பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். இந்த சாலை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களுக்குள்  உருவாக்கப்பட்டுள்ளதால் பல அதிசயங்களை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

 

அதில் சில வற்றை இங்கேயே பார்க்கலாம்..,

 

தென்னாப்பிரிக்கா: டேபிள் (மவுண்ட்) மலை:-

Untitled design (79).jpg

 

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனின் புகழ்பெற்ற டேபிள் மவுண்டனில் இருந்து உங்கள் பயணத்தை புதிதாகவும் உற்சாகமாகவும் தொடங்குங்கள். டேபிள் மவுண்டன் தேசியப் பூங்காவிற்குள் அமைந்திருக்கும் இந்த மலையானது, அதன் தனித்துவமான டேபிள் வடிவம் மற்றும் சிகரத்தை மறைக்கும் மேஜை-துணி போன்ற மேக அமைப்புகளை கொண்டுள்ளது. இந்த மலை மீது இருந்து கடற்கரையை பார்க்கும் போது சில மணி நேரம் சொர்க்கத்திற்கு சென்று வந்தது போல் உணர்வீர்கள்...(நிபந்தனைக்குட்பட்டது)

 

போட்ஸ்வானா –

Untitled design (80).jpg

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடான போட்ஸ்வானா நாட்டின் வழியாக செல்ல வேண்டும். இங்கு ஆப்பிரிக்காவின் நம்பமுடியாத சில வனவிலங்குகளைப் நீங்கள் பார்க்கலாம். ஏழை நாடு தான் என்றாலும், ஆடம்பர மர லாட்ஜ்கள் முதல் ஸ்பா ரிசார்ட்டுகள் வரை இங்கே உள்ளது. உங்கள் முதல் 6 வார நடைப்பயணத்திற்குப் பிறகு இங்கு சற்று ஓய்வெடுக்கலாம். சரி ரெம்ப நேரம் வேண்டாம். கிளம்புங்கள்..

 

ஜாம்பியா - விக்டோரியா நீர்வீழ்ச்சி:-

 

Untitled design (81).jpg

 

போட்ஸ்வானா பயணத்தை அடுத்து  ஜாம்பியாக வழியாக தான் செல்ல வேண்டும். அங்கு  ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே எல்லையில் உள்ள ஜாம்பேசி ஆற்றின் மீது அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சியை பார்த்து வீட்டு செல்லுங்கள். 1,708 மீ அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக இது உள்ளது. மேலும் இது ஆபிரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதுடன், யுனெஸ்கோ வின் உலகப் பாரம்பரிய இடமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எகிப்து -பிரமிடுகள் :-

 

Untitled design (82).jpg

 

 14,000 மைல் நடைப்பயணத்தை முடித்துவிட்டு, உலகின் இறுதி அதிசயத்தைப் பார்க்க மறந்துவிட்டால், அது எவ்வளவு சங்கடமாக இருக்கும்? உலகின் கடைசியாக எஞ்சியிருக்கும் உன்னதமான அதிசயமாக, பிரமிடுகள் பார்க்கப்படுகிறது. அப்படி எகிப்து வழியாக செல்லும் போது இன்னும் பல புதிர்களை சுமந்து கொண்டிருக்கும் பிரமிடுகளை பார்த்து விட்டு செல்லுங்கள். எகிப்தில் உங்களுடைய பயணம் 181 நாட்கள் எடுக்கும் என்பதால் அதற்கு ஏற்றவாறு தேவையான உணவை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.

 

ஜோர்டான் - பெட்ரா:-

 

Untitled design (83).jpg

 

எகிப்து பயணத்திற்குப் பிறகு இப்போது மற்றோரு அதிசயத்தை பார்க்கப்போகிறீர்கள், ஜோர்டன் நாட்டின் தெற்கில் அமைந்துள்ள  உலகப் புகழ்பெற்ற அல்-கஸ்னே  கோயில் தான் அது. இது மணற்கல்லான பாறையில் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டிடமாகும். இவை நபாட்டியன் மன்னர் அரேடாஸ்  கல்லறை  என்று நம்பப்படுகிறது, இது ஜோர்டானில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். போகிற போக்கில் அப்படியே பார்த்து விட்டு செல்லுங்கள்.

 

துருக்கி - வான் ஏரி:-

 

Untitled design (84).jpg

 

ஜோர்டன் நாட்டை கடந்து நீங்கள் அடுத்ததாக துருக்கி வழியாக தான் செல்ல வேண்டும்.. ஆர்மீனிய மன்னர்கள் முதல் மங்கோலியர்கள் வரை துருக்கியை ஆட்சி செய்துள்ளனர். துருக்கியில் உள்ள வான் ஏரி உங்களுக்கு அற்புதமான தோற்றத்தை வழங்கும்..சுற்றி கலைத்த போன உங்களுக்கு  ஒய்வெடுக்க துருக்கி  ஒரு சரியான இடம்..

 

ஜார்ஜியா - திபிலிசி:-

Untitled design (85).jpg

 

கிட்டத்தட்ட பயணத்தின் இறுதிக்கு வந்துவிட்டீர்கள்..ரஷ்யாவிற்கு அருகில் உள்ள ஜார்ஜியாவின் தலைநகரமான திபிலிசி அழகிய பழமையான கட்டிடங்களை கொண்டுள்ளது. 4 ஆம் நூற்றாண்டின் கட்டப்பட்ட  நரிகலாவின் கோட்டைக்கு கீழே இந்த நகரம் அமைந்துள்ளதால் பல வரலாற்று தேவாலயங்கள், ஆர்ட் நோவியோ கட்டிடங்கள் உங்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். 

 

ரஷ்யா :-

Untitled design (86).jpg

 

சற்று மூச்சு விட்டுக்கொள்ளுங்கள்....பயணத்தின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டீர்கள்..ஆனாலும் நீங்கள் இன்னும்.253 நாட்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதை மறந்து வீடாதீர்கள். ஆம் கடைசியாக உங்களுடைய பயணம் ரஷ்யாவில் 8 மாதங்கள் எடுக்கும். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவின் பழக்கவழக்கங்கள், விசித்திரங்கள் மற்றும் மக்களின் பன்முகத்தன்மையை நீங்கள் பார்க்கலாம்...இங்கு மகதன் என்ற இடத்தில் இருந்து இந்த சாலை முடிவடைகிறது என்பதால் நீங்களும் பயணத்தை முடித்துக்கொள்ளலாம். வழியில் எதுவும் பிரச்சை என்றால் டோரோ போன்று நீங்கள் கூகுள் மேப்பிடம் உதவி கோரலாம் இருந்தாலும் அதனை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்