Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lake Natron Human Deaths: மர்மமான சிவப்பு ஏரி...உள்ளே இறங்குனா...கல்லாக மாறும் அமானுஷ்யம்! என்ன காரணம்?

Priyanka Hochumin June 22, 2022 & 19:30 [IST]
Lake Natron Human Deaths: மர்மமான சிவப்பு ஏரி...உள்ளே இறங்குனா...கல்லாக மாறும் அமானுஷ்யம்! என்ன காரணம்? Representative Image.

Lake Natron Human Deaths: ஆப்பிரிக்காவில் இருக்கும் ஏரிகளில் மிகவும் ஆபத்தான, அமானுஷ்யம் நிறைந்த ஏரியாக நேட்ரான் ஏரி திகழ்கிறது. காரணம்?

இந்த பிரபஞ்சத்தில் இறைவன் படைத்த மிகவும் அழகான வியக்க வைக்கும் அழகைக்கொண்டு நிறைய இடங்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் உயிருக்கு ஆபத்து அளிக்கும் வினோதமான பல இடங்களும் உள்ளது. இது எதனால் படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு, இப்ப இருக்கும் தொழிநுட்ப வளர்ச்சியாலும் பதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அது மனிதனின் யோசனைக்கு அப்பாற் பட்டது. அதில் ஒரு இடமாக ஆப்பிரிக்கா நாட்டில் இருக்கும் நேட்ரான் ஏரி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீலம் இல்ல சிவப்பு ஏரி

தண்ணீர் என்றாலே நீல நிறத்தில் தான் இருக்கும், இது என்னடான்னா சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இதுவே ஒரு அதிசயம் தான், ஆனால் ஏன் இப்படி இருக்குது தொடர்ந்து படியுங்கள். இந்த ஏரியில் இருக்கும் ஆல்கலைன் வாட்டர் 10.5 pH அளவைக் கொண்டுள்ளது. ஆல்கலைன் அளவு ஏன் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்றால், ஏரியின் அருகில் இருக்கும் மலைகளில் இருந்து வெளியேறும் சோடியம் கார்பனேட் மற்றும் பிற தாதுக்களால் உயர்ந்துள்ளது. இது எந்த அளவுக்கு ஆபத்தானது என்றால், இது மிகவும் காஸ்டிக் ஆகும். எனவே இந்த நேட்ரான் ஏரியில் சோடியம் கார்பனேட் அதிகமாக இருப்பதால் இதனை தாங்க முடியாமல் நீருக்குள் இறங்கும் விலங்குகள் தோல் முதல் கண் வரை அனைத்தும் எரிந்து இறந்து விடுகின்றன.

அந்த காலத்தில் சோடியம் கார்பனேட்டின் வைப்பு பயன்படுத்தி மன்னர்களின் இறந்த உடலை பதப்படுத்தியுள்ளனர். அதனை 'மம்மிஃபிகேஷன்' என்று கூறப்படுகிறது. எனவே, இந்த ஏரியில் இறங்கும் விலங்குகள் இறந்து விடுமே தவிர, மக்கிப்போகாது. நேட்ரான் ஏரியில் உள்ள சோடியம் கார்பனேட் விலங்குகளின் உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.


Bermuda Triangle Tour:  அழகும் ஆபத்தும் நிறைந்த உலகின் மர்ம தீவு பற்றிய அறியாத உண்மைகளும் சூப்பரான ஆஃபரும்…


ஈக்கோ-சிஸ்டத்தை பாதுகாக்கிறது

இது விலங்குகளின் உயிரை எடுக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நேட்ரான் ஏரி இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கிறது. எப்படியென்றால் உப்பு சதுப்பு நிலங்கள் (salt marshes), நன்னீர் ஈரநிலங்கள் (freshwater wetland), ஃபிளமிங்கோக்கள் ( flamingos) மற்றும் பிற ஈரநிலப் பறவைகள் (other wetland birds), திலாபியா  (tilapia) மற்றும் பாசிகள் (algae) ஆகியவற்றின் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கிறது. 

பறைவைகளின் இனப்பெருக்க காலத்தில், 2 மில்லியன் ஃபிளமிங்கோக்கள் (பீனிகாப்டெரஸ் மைனர்) ஆப்பிரிக்காவில் ஆழமற்ற ஏரியை தங்கள் முதன்மை இனப்பெருக்கம் செய்யும் இடமாக பயன்படுத்துகின்றன. வறண்ட காலங்களில் ஏரியில் உருவாகும் சிறிய தீவுகளில் ஃபிளமிங்கோக்களின் கூடுகள் கட்டப்பட்டுள்ளன.


Lemur Beach :-குமரியில் ஒரு குட்டி மாலத்தீவு...!

 


பாத்தீங்களா எந்த ஒரு விஷயத்திலும் கேட்டது ஒன்று இருந்தால் நல்லது என்ற ஒன்னும் இருக்கும். அதற்கான சிறந்த உதாரணமும் இந்த வித்தியாசமான நேட்ரான் ஏரி ஏறி தான். சரி இந்த ஏரிக்குள் மனிதர்கள் இறங்கினாலும் இப்படி தான் ஆகுமா? அதற்கு சாத்தியமா வாய்ப்பு இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.இருப்பினும் இங்கே போக வேண்டும் என்றால் கவனமாக இருங்கள்.

Lake Natron Human Deaths, Lake Natron facts, Lake Natron mystery, Lake Natron stone human, flamingo lake natron human deaths, mysterious place in the world tamil, scariest place in the world tamil,  

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்