Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொத்து கொத்தாய் குலுங்கும் ருத்ராட்சைகள்! விதவிதமாய் போட்டோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

Gowthami Subramani February 08, 2022 & 15:20 [IST]
கொத்து கொத்தாய் குலுங்கும் ருத்ராட்சைகள்! விதவிதமாய் போட்டோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! Representative Image.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இயற்கைப் பூங்காவாக அவதரித்தது தான் இந்த சிம்ஸ் பூங்கா. இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுலா தளமாகும். இங்கு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

ஒரு அசாதாரணமான தாவரவியல் பூங்காவாகத் தொடங்கி பல இயற்கை வரையரைகளைக் கொண்டு மெம்மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள அழகிய மரங்கள், செடிகள், வண்ணத்தினைத் தன் வசமாக்கிக் கொண்ட மலர்கள், புதர்கள் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த இயற்கை அம்சத்தைக் கொண்ட பூங்காவாக உள்ளது.

A picture containing tree, grass, garden, outdoor

Description automatically generated

இந்த பூங்காவிற்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிப்பர். இந்தப் பகுதியில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. இது தாவரவியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கமாகவும் கருதப்படுகிறது. ருத்ராட்சை நேபாளத்தைத் தாயகமாகக் கொண்ட மரமாகும். இது கடந்த 1948 ஆம் ஆண்டு, இந்த சிம்ஸ் பூங்காவில் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

இந்து சமயத்தில், ருத்திராட்சை ஒரு இறையாண்மை கொண்ட முக்கிய அம்சமாக உள்ளது. எனவே, இந்தப் புனிதமான மரத்தை, சுற்றுலாப் பயணிகள் இறைபக்தியுடன் பார்த்து செல்வர். இந்த மரத்தின் விதையாகக் கருதப்படும் ருத்ராட்சையின் தாவரவியல் பெயர் “எலியோகார்பஸ் கனிட்ரஸ்” என்பதாகும்.

A picture containing tree, outdoor, green, plant

Description automatically generated

இவை பெரும்பாலும், இமயமலை அடிவாரத்திலுள்ள கங்கை சமவெளிப் பகுதிகளிலிருந்து, இந்தோனேசியா, ஹவாய் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகள் வரை வளர்கின்றன. ருத்ராட்சை, இந்திய பாரம்பரியத்தில் நோய் நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக, ருத்ராட்சையில், 1 முதல் 21 அளவிலான முகங்கள் காணப்படும். இவற்றில் 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சைக் கொட்டைகளை இந்துக்கள் கழுத்தில் அணிந்து கொள்வர். தற்போது, ருத்ராட்சை வளர்வதற்கான சீசனைத் தொடர்ந்து சிம்ஸ் பூங்காவில் இருக்கும் 3 மரங்களில் ருத்ராட்சை காய்கள் காய்த்து குலுங்குகின்றன. சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இவற்றின்புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.

இது மட்டுமல்லாமல், மரத்திலிருந்து விழும் ருத்ராட்சை காய்களை உள்ளூர்வாசிகள் சேகரித்து அதனை மாலையாக மாற்றி பூங்காவில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வர். ரூ.10 முதல் ரூ.30 வரையிலான அளவில் 1 காயும், அரிய காய்கள்  ரூ.500 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படும்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது search around web பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்