Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Christmas Special : ஜிலு ஜிலு-ன்னு கிறிஸ்துமஸ்-க்கு எங்கையாவது போலாமா? இங்க அதுக்காக தனி ஈவென்ட்லாம் நடக்குதாம்! | houseboat in kashmir dal lake

Priyanka Hochumin Updated:
Christmas Special : ஜிலு ஜிலு-ன்னு கிறிஸ்துமஸ்-க்கு எங்கையாவது போலாமா? இங்க அதுக்காக தனி ஈவென்ட்லாம் நடக்குதாம்! | houseboat in kashmir dal lakeRepresentative Image.

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் பல விஷயங்களுக்காக சிறப்பு வாய்ந்தது. அதிலும் அதிகம் சுற்றுலா தளங்களுக்கு பேர் போனது நம் இந்தியா. அதிலும் ஜம்மு அண்ட் காஷ்மீர் "பூமியின் சொர்கம்" என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. காரணம்! கொஞ்சம் கூட மாசுபாடு இல்லாத நகரம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென மரம் மற்றும் வயல்கள். காலையில் சூரியனின் வெளிச்சம் பாதி மலைகளால் மூடப்பட்டு மிதமான வெளிச்சத்தில் அற்புதமான அழகை நமக்கு காண்பிக்கும். வானம் கடலைப் போல நீல நிறத்தால் சூழ்ந்து அதன் மீது அங்கங்கு வெள்ளை நிறத்தில் மேகம் மறைத்து பளபளப்பான சில்வர் நேரத்தில் பனி கட்டிகள் மலையை அபகிர்த்து பூமி முதல் ஆகாயம் வரை அழகோ அழகு. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

Christmas Special : ஜிலு ஜிலு-ன்னு கிறிஸ்துமஸ்-க்கு எங்கையாவது போலாமா? இங்க அதுக்காக தனி ஈவென்ட்லாம் நடக்குதாம்! | houseboat in kashmir dal lakeRepresentative Image

பொதுவாக மக்கள் சம்மர் காலத்தில் தான் ஜம்மு அண்ட் காஷ்மீர்-க்கு சுற்றுலா வருவார்கள். இந்த முறை புதிதாக முயற்சிக்க மாநில அரசு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு சுற்றுலாத் துறையுடன் இணைந்து குளிர் காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. எனவே, அதிக மக்களை மகிழ்விக்க பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Christmas Special : ஜிலு ஜிலு-ன்னு கிறிஸ்துமஸ்-க்கு எங்கையாவது போலாமா? இங்க அதுக்காக தனி ஈவென்ட்லாம் நடக்குதாம்! | houseboat in kashmir dal lakeRepresentative Image

வின்டர்ல எது பெஸ்ட்?

இந்த பகுதியில் குளிர் காலத்தில் Gulmarg இன் ஸ்கை ரிசார்ட்டிற்க்கு என்று தனி மவுசு உள்ளது. ஆனால் அரசாங்கமோ அத்துடன் சேர்த்து சோன்மார்க், பஹல்காம், தூத்பத்ரி மற்றும் யுஸ்மார்க் போன்ற பிற இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதற்காகவே ஜம்மு அண்ட் காஷ்மீர் சுற்றுலா துறையானது அட்டகாசமான நிகழ்ச்சியை வரும் வாரங்களில் அரங்கேற்ற முடிவெடுத்துள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியில் 'படகுவீடு குளிர்கால விழா' (Houseboat Winter Festival) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Christmas Special : ஜிலு ஜிலு-ன்னு கிறிஸ்துமஸ்-க்கு எங்கையாவது போலாமா? இங்க அதுக்காக தனி ஈவென்ட்லாம் நடக்குதாம்! | houseboat in kashmir dal lakeRepresentative Image

காஷ்மீரில் மட்டும் தான் ஜபர்வான் மலைகள் பின்னணியில் மைனஸ் டிகிரி வெப்பநிலைக்கு மத்தியில்  தால் ஏரியின் அழகை நம்மால் பார்க்க முடியும். குளிர் காலத்தில் ஏரியின் நீர் வெப்பத்தால் உறைந்து போய்விடும். எனவே, மக்களுக்கு இது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். இப்படி பல ஏற்பாடுகள் செய்வது வின்டர் சீசனில் மக்களை துடிதுடிப்பாக வைத்திருக்க தான் என்று சுற்றுலாத்துறை இயக்குனர் ஃபசல் உல் ஹசீப் தெரிவிக்கிறார். மேலும் இந்த கிறிஸ்துமஸ் இன் போது சுற்றுலா செல்ல முடிவு செய்தால் இதை விட அற்புதமான வாய்ப்பு எதுவும் இருக்காது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்