Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Prepare For Trekking? | மலையேற்றம் செய்வது எப்படி?

UDHAYA KUMAR Updated:
 How To Prepare For Trekking? | மலையேற்றம் செய்வது எப்படி?Representative Image.

மலைப்பகுதியில் பயணம் செய்வதற்கென்றே பல வழிகாட்டிகள் இருப்பார்கள். அவர்களின் உதவியுடன் செல்பவர்களுக்கும் சரி, இந்த தகவல்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 

மலைப்பகுதியில் பயணிப்பது தொடர்பான டிப்ஸ்கள்

  • வாக்கிங், ஹைக்கிங், டிரெக்கிங் என பலவாறு அழைத்தாலும் தமிழில் இதை மலையேற்றம் என்றே அழைக்கிறார்கள்.
  • வாக்கிங் என்பது சமதளமான பகுதியில் 1 முதல் 4 கிமீ தூரம் அளவுக்கு நடப்பது. 
  • ஹைக்கிங் என்பது 4 மணி நேர தூரத்திலிருந்து 1 நாளுக்குள் ஏறி இறங்கிவிடும் வகையில் மலையேற்றம் செய்வது. 
  • டிரெக்கிங் என்பது மலையில் பயணம் செய்து, அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு பொழுதுபோக்கி மனதை நிம்மதியாக அமர்த்துவதுதான். 
  • மலையேற்றம் செய்வதற்கு முன் தொடர்ச்சியாக வாக்கிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்
  • அதிகாலை வேளையில் டிரெக்கிங் செல்ல திட்டமிடும்போது இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையிலேயே மலை ஏறுவதால் அதிகம் மூச்சு வாங்கலாம். இதனால் நடைபயிற்சி வழக்கமாக செல்பவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுவது இல்லை
  • மூச்சு பயிற்சி, தியானம் உள்ளிட்டவை வழக்கமாக செய்ய வேண்டும்
  • மலையேற்றத்துக்கு உடல் வலிமையும் மன வலிமையும் மிகவும் முக்கியம். மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும்.  பயப்படக் கூடாது. 
  • இந்தியாவின் மலைப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். இதனால் அந்தந்த மலைப்பகுதிக்கு ஏற்றவகையிலான ஷூக்களை வாங்க வேண்டும். 
  • காரமான, வயிற்றைக் கெடுக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. அதேநேரம் வீட்டிலிருந்து சாப்பிட்டு செல்வதாக இருந்தாலும் பயண காலத்தில் உங்களுக்கு ஒத்துக்காத உணவுகளை தவிர்க்க வேண்டும். 
  • பிரெட், ஜாம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு, நீர்ச்சத்து நிறைந்த சாப்பிடும் பொருட்களை கொண்டு செல்லலாம்
  • தேவைப்படும் என நினைத்து கண்டது கழியது என அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. நாமே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். 
  • டார்கெட் வைத்து வேகமாக நடந்து செல்வதால் தேவையற்ற பிரச்னைதான் உண்டாகும். மெதுவாக நடந்து சென்று இலக்கை அடையலாம். 
  • மலையேற்றத்தின் போது சாய்வான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டாம். சமதளபரப்பில் நின்று, அமர்ந்து ஓய்வெடுங்கள்
  • உடலுக்கு உகந்த ரொம்பவும் தளர்வாக இல்லாத அதிக எடை இல்லாத உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • முடிந்தவரை ஆட்களுடன் செல்வது சிறந்தது. தனியாக சென்று முழித்துக் கொண்டிருக்கக்கூடாது
  • மிக மிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. 

சுற்றுலா செல்வதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய அளவில் ஈடுபாடு இருக்காது. அவர்கள் படிக்க, உழைக்க, சம்பாதிக்க செய்வதை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுவார்கள். அவர்களிடம் சுற்றுலா பற்றி கேட்டால் அதிகபட்சம் கோவில்களுக்கு செல்வதையே சுற்றுலா என்பார்கள். ஆனால் இந்த தலைமுறையினர் கொஞ்சம் சுற்றுலாவைப் பற்றிய புரிதலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மன நிம்மதியைத் தேடி காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சுற்றுலாவின் நன்மையை உணர்ந்து அவ்வப்போது பயணியுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்