Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

Weekend ட்ராவலுக்கு ரெடியா...சென்னை டூ பாண்டி...சீப் அண்ட் பெஸ்ட் இடங்கள்!

Priyanka Hochumin Updated:
Weekend ட்ராவலுக்கு ரெடியா...சென்னை டூ பாண்டி...சீப் அண்ட் பெஸ்ட் இடங்கள்!Representative Image.

சென்னை வாசிகள் வாரம் முழுவம் மெஷின் போல ஓடி ஓடி வேலைக்குச் செல்வார்கள். வார கடைசியில் தான் அப்பாடா என்று நல்ல ரெஸ்ட் எடுப்பார்கள். அப்படி இருக்கையில் மனைவி, குழந்தைகள் மற்றும் காதலியுடன் எங்கையாவது வெளிய செல்லலாம் என்றால் மால், பீச், காபி ஷாப் போல இடங்களுக்கு செல்வார்கள். இப்படி போன இடத்துக்கே போயி அழுத்து போச்சா? கவலைய விடுங்க. இதோ சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரை ரோட் ட்ராவல் செல்லும் வழியில் இருக்கும் பல இடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

முதலை காப்பகம்

நீங்கள் விலங்குகள் மீது நாட்டம் கொண்டவர்கள் அல்லது குழந்தைகளுக்கு விலங்குகள் பற்றி கற்பிக்க விரும்பினால் சென்னையில் இருக்கும் இந்த முதலை காப்பகத்திற்கு செல்லலாம். இங்கு முதலைகள் மட்டும் அல்லாது அரிய வகை பாம்புகள், ஆமைகள், உடும்புகள் போன்ற பல விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கைலாசநாதர் கோவில்

எப்படி தஞ்சை பெரிய கோவில் உலகளவில் சிற்பங்களுக்காக பேர் போனதோ, அதே போல சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து 86 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த காஞ்சி கைலாசநாதர் கோவில் தனக்கென தனித்துவமான கற்சிற்பங்களுக்காக தனி சிறப்பு பெற்றது.

வண்டலூர் ஜூ

ஒரு வாரம் ஆனாலும் முழுசா சுத்திப் பாக்க முடியாது, அவ்ளோ பெரிய ஜூ இது. இங்க அனைத்து வகையான விலங்குகளையும் பார்க்க முடியும். உங்க பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், அதிக செலவு இல்லாமல் நல்லா டைம் பாஸ் பண்ணலாம்.

தக்ஷிண சித்ரா

முட்டுக்காடு பகுதியில் இருக்கும் இந்த இடமானது பாரம்பரிய தென்னிந்தியர்களின் கட்டடக்கலை, கலாச்சாரம், இசை கருவி போன்ற பல விஷயங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. மனிதர்களை போலவே ஒவ்வொரு இடத்திலும் பொம்மைகளை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுக்க அங்கு சென்று போட்டோ எடுத்துக்கொள்ளலாம். எனவே, ஆறு மாதத்திற்கு DP-க்கு போட்டோ பிரச்சனை இருக்காது.

மாமல்லபுரம்

அல்லது மகாபலிபுரம் என்று குரபப்டும் இந்த இடமானது தமிழர்களின் கட்டுமானத்தை அங்கீகரிக்கும் வகையில் இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்களை மறந்து வியப்பில் ஆழ்ந்து ரசித்து பார்க்கும் இடங்களுள் இதுவும் ஒன்று. மேலும் அங்கு இருக்கும் "கிருஷ்ணரின் பந்து" என்று அழைக்கப்படும் பெரிய உருண்டை பாறை பேமஸ் பாயிண்ட்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்