Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்ம திருவண்ணாமலைக்கும் வெள்ளூருக்கும் இடையில இப்படி ஒரு ஹில்ஸ்டேசனா...? இவ்வளவு நாளா இத மிஸ் பண்ணிட்டோமே...!!

Nandhinipriya Ganeshan June 13, 2022 & 14:45 [IST]
நம்ம திருவண்ணாமலைக்கும் வெள்ளூருக்கும் இடையில இப்படி ஒரு ஹில்ஸ்டேசனா...? இவ்வளவு நாளா இத மிஸ் பண்ணிட்டோமே...!!Representative Image.

Javadhu Hills Station: தமிழ்நாட்டை பொறுத்தவரை மலைவாசஸ்தலங்களுக்கு (Hill Station) பஞ்சமே இல்லை. நமக்கு ஏதாவது ஒரு குளிர்ச்சியான இடத்திற்கு டூர் போக வேண்டும் என்று பிளான் போடும்போது, உடனே நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஹில்ஸ்டேசன்கள் தான். ஆனால், நம் தமிழ்நாடு யாருக்கும் தெரியாத பல அழகான மலைகளை கொண்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த ஜவ்வாது மலை  ஊட்டி, கொடைக்கானல் போன்ற அதே வசீகரிக்கும் அழகு, அதே குளிர்ச்சி, அதே பரந்த விரிந்த பச்சை நிற காடுகள், மலைகள் என கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக அத்தனை அழகை கொண்டுள்ளது.

இப்படி ஒரு மலையா? இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சே.. என்று தானே சிந்திக்கிறீர்கள். ஆமாம், இவ்வளவு நாளா இந்த இயற்கையின் அழகை மிஸ் பண்ணிட்டீங்க. இந்த ஹில்ஸ்டேசன் வேற எங்கையும் இல்லைங்க, நமக்கு பக்கத்துல தான் இருக்கு. இது நம்ம திருவண்ணாமலை (where is javadi hills located) மாவட்டத்தில்தாங்க இருக்கு. 

இந்த மலையை ஜவாதி (Javadhi Hill) அல்லது ஜவ்வாது மலை (Javadhu Hill Station) அல்லது ஜவாடி மலை (Javadi Hills) என்றும் அழைப்பார்கள். இந்த மலையில் நீர்வீழ்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லை. மலையேற்றப் பாதைகளின் அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் மற்றும் நீர்வீழ்ச்சி பிரியர்களுக்கு இது ஒரு வரபிரசாதம். 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3800 அடி உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைபகுதியில், சூரியன் மறையும் போது, மலைகள் ஊதா நிறத்துடன் (javadi hills speciality) காட்சியளிக்குமாம். இங்கு பல விதமான மருத்துவ குணம் நிறைந்த மரங்கள், செடிகள் அதன் வாசனை நம்மை சுண்டி இழுக்கும். அதுமட்டுமல்லாமல், இங்கு ஏராளமான சந்தன மரங்களும் இருக்கின்றதாம். இங்குள்ள முக்கிய ஐந்து சுற்றுலா தலங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. நீங்க ஜவாதி மலைக்கு போனால் இந்த இடங்களுக்கு (javadi hills tourist places) போக மறந்துடாதீங்க.

பீமன்மடவு அருவி - இந்த அருவி ஜமனமரத்தூரிலிந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு வருடத்தில் ஏழு மாதங்களும் தண்ணீர் வற்றாது வந்துக் கொண்டே இருக்குமாம். 

காவலூர் ஆய்வகம் - இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி இருக்கிறதாம். மிஸ் பண்ணாமல் போய் பாத்துட்டு வாங்க.

அமிர்தி ஃபாரஸ்ட் - ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு இது சிறந்து இடம். 

ஏலகிரி மலை - கடல் மட்டத்திலிருந்து 1410 மீட்டர் உயரத்தில் உள்ள மலைவாசஸ்தலம். இந்த இடம் ஜாவடி மலையில் அமைந்துள்ள ஒரு கிராமம். பழத்தோட்டங்கள், ரோஜா தோட்டங்கள் மற்றும் அழகான பச்சை பள்ளத்தாக்குகளால் நிறைந்துள்ளன.

கோமுட்டேரி ஏரி - பிக்னிக் மற்றும் படகு சவாரி செய்வதற்கு இது ஒரு நல்ல இடம். இந்த ஏரியின் மையத்தில் ஒரு தீவு இருக்கிறதாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்