Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Lemur Beach :-குமரியில் ஒரு குட்டி மாலத்தீவு...!

Bala May 25, 2022 & 15:41 [IST]
Lemur Beach :-குமரியில் ஒரு குட்டி மாலத்தீவு...!Representative Image.

Lemur Beach :-கன்னியாகுமாரிக்கு வரும் அனைவரும் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு சென்று கடலில் கால் நனைத்து விட்டு அவ்வளவு தான் என கிளம்பி விடுகிறார்கள், உண்மையில் கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள குட்டி மாலத்தீவைப் பற்றி பார்க்கலாம்.

 குட்டி மாலத்தீவு:-

நீரின் நடுவே மிதக்கும் விடுதிகள் மட்டும் தான் இல்லை மற்றப்படி குறைந்த அலை, நீலமும், பச்சை நிறமும் கலந்த அழகிய கடல், அண்ணாந்து பார்க்க வைக்கும் தென்னை மரங்கள், என அப்படியே அச்சு அசலாக மாலத்தீவு போல் தோன்றமளிக்கிறது லெமூர் பீச். 

கன்னியாகுமரியில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், நாகர்கோயிலில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நாகர்கோயிலில் இருந்து குளைச்சல் செல்லும் சாலையில், ராஜக்கமங்கலம் பகுதியை அடுத்த கனபதிபுரம் பகுதியில் தான் இந்த அழகிய லெமூர் பீச் அமைந்துள்ளது. அங்கு செல்லும் வழியில் இருபுறமும் தென்னை மரங்கள் உங்களை வரவேற்கும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் 8 மணி வரை அனுமதி உண்டு. ஞாயிற்றுகிழமைகளில் 24 மணி நேரமும் செல்லலாம். தங்கும் விடுதிகள் எதுவும் அங்கு இல்லை என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.

சிறப்பு:-

பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீர் பல வயல்களுக்கு பாசனம் செய்து அரபிக்கடலில் கலக்கும் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. திரைப்பட படப்பிடிப்புக்கு பிரபலமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட அகலமான கடற்கரையாக லெமூர் கடற்கரை உள்ளது. இங்கு கடற்கரையில் அமர்ந்து அலையை ரசிக்கும் போது, உங்கள் உள்ளத்திற்குள் ஏற்படும் பரவசநிலையை நீங்கள் உணரலாம். மன அமைதி, புதிய இடங்களை தேடி செல்பவர்கள் மற்றும் குடும்பத்துடன் பொழுதை போக்க நினைப்பவர்களுக்கு இந்த இடம் மிகச் சிறந்தது.

இந்த கடற்கரைக்கு ஆயிரம் கால் பொழிமுகம் என மற்றொரு பெயரும் உண்டு. இங்கு சொந்த வாகனத்தில் செல்வது நல்லது. பேருந்தில் செல்பவர்கள், கனபதிபுரம் வரை சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து தான் செல்ல வேண்டும்.

செய்யக்கூடாதவை:-

அழகான கடற்கரையை அசுத்தம் செய்யாதீர்கள். குளிப்பதற்கு அனுமதி இல்லை என்பதால்,  கடலுக்குள் நடப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

குறிப்பு:- இங்கு மது அருந்த அனுமதி இல்லை..


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்