Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த இடத்தைப் பத்தி தெரிஞ்சா… நீங்க போகாம இருக்க மாட்டீங்க…!

Gowthami Subramani September 16, 2022 & 13:40 [IST]
இந்த இடத்தைப் பத்தி தெரிஞ்சா… நீங்க போகாம இருக்க மாட்டீங்க…!Representative Image.

ஆறு, அணை, வாட்டர் ஃபால்ஸ், பார்க் இவற்றை எல்லாம் பிடிக்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள். அதுவும், கோடைக் காலம் வந்து விட்டால் மக்கள் படையெடுத்து நீர் இருக்கும் பகுதிக்கு அதிகம் சென்று வருவது வழக்கம். அணை, அருவி என நீர் நிறைந்து காண்போர்களை கண்கவர் பகுதியாக இருப்பது தான் கொடிவேரியில் உள்ள பகுதிகள். இது சுற்றுலாத் தளமாக, அனைவரும் விரும்பிச் செல்லக் கூடிய ஒரு இடமாகும். இந்தப் பகுதியில் உள்ள அணைகள், அருவிகள் காண்பவர்களை இந்த இடத்திலேயே இருக்க வைக்கும் எண்ணம் தோன்ற வைக்கக் கூடியது.

கொடிவேரி உருவான வரலாறு

கொடிவேரி அணை ஒரு சிறிய பகுதியில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாத் தளமாக உள்ளது. கொடிவேரி என்ற பெயர், கொடிவாரி என்ற சொல்லில் இருந்து வந்தது. கொடிவேரி என்பதன் தமிழ் பெயர் புலி என்று பொருள்.

இந்தப் பகுதியில், புலிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட கொடிவேரி என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப காலத்தில், இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அமைத்து, நீர் வரத்து சீராக இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், விவசாயிகள் சிக்கல்களை மேற்கொண்டனர். அதன் பிறகு, இந்தப் பகுதியில் அணை உருவாக்கப்பட்டு தற்போது அனைவரும் விரும்பக் கூடிய சுற்றுலாத் தளமாக உள்ளது.

கொடிவேரி அணை உள்ள இடம்

சுற்றுலாத் தளமான இது, கோயம்புத்தூரில் இருந்து 75 கி.மீ தொலைவிலும் மற்றும் ஈரோட்டில் இருந்து 70 கி.மீ தொலைவிலும் உள்ள, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்திய மங்கலம் பகுதிக்கு அருகே உள்ள அருமையான சுற்றுலாத் தளமாக உள்ளது. ஈரோட்டில் மிகவும் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ள சுற்றுலாத் தளமாகும்.

கொடிவேரி அணையின் சிறப்பு

இந்த அணையின் சிறப்பே, அணைகளும், அருவிகளும் ஆகும். இங்கு இருக்கும் அணையின் கீழ், நீரோட்டத்தால் உருவாக்கப்பட்ட அருவி ஒன்று இருக்கும். இது அழகிய காட்சிகளைக் கொண்ட அற்புதமான இடமாகும். இந்தப் பகுதியில் நீர் வீழ்ச்சி கனமாக இருக்காது. இதனால், இந்தப் பகுதியில் யார் வேண்டுமானாலும் எளிமையாக நீர் வீழ்ச்சியின் அடிப்பகுதிக்கு சென்று மகிழலாம். இந்த இடம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரக் கூடியதாக அமையும்.

கொடிவேரி அணை திறப்பு நேரம்

இந்த அணைக்குச் செல்ல, பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த இடத்தை பற்றித் தெரிந்து கொள்ளும் போதே, அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என மனம் நினைக்கக் கூடிய இடமாகும். கோடைக் காலத்தில் நீர் நிலைகள் சார்ந்த பகுதிக்குச் செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்