Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

karnataka tour:-கடவுளின் தேசம் கர்நாடகா தான்...? யாரு சொன்னது, போயிட்டு வந்தா நீங்களே சொல்லுவீங்க..

Bala May 04, 2022 & 15:23 [IST]
karnataka tour:-கடவுளின் தேசம் கர்நாடகா தான்...? யாரு சொன்னது, போயிட்டு வந்தா நீங்களே சொல்லுவீங்க..Representative Image.

karnataka tour:-கடவுளின் தேசமாக இவ்வளவு காலம் கேரளா என்றே நம்மை நம்ப வைத்து விட்டார்கள், உண்மையில் கடவுளின் தேசம் என்றால் அது கர்நாடகா தான், கர்நாடகாவில் ஏராளமான மலை சிகரங்கள், செழிப்பான, பசுமையான இடங்கள் மற்றும் பாரம்பரிய கோயில்களும் ஏரளாமாக உள்ளது. மேலும் மலையேற்ற வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் டிரக்கிங் பாய்ண்டுகளும் அங்கு உள்ளது. அப்படி  சவால் கொடுக்கக்கூடிய  தடியாண்டமோல் மலை சிகரத்தை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தடியாண்டமோல்:-

கர்நாடக மாநிலத்தின் மூன்றாவது மலைசிகரமாகவும், மலை வாசஸ்தலமாகவும் இது காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார், 1748 மீட்டர் உயரம் கொண்டது இந்தமலை வாசஸ்தலம், கூர்க் அருகே உள்ள கக்கபே நகரத்துக்கு அருகில் உள்ளது.மலை ஏறிகளுக்கும், மலை விரும்பிகளுக்கும் இந்த மலை உண்மையிலையே சவால் அளிக்கக்கூடியது. மலை ஏராளமான பள்ளத்தக்குகளையும், சூரிய ஒளிக்கீற்றுகள் கூட புகமுடியாத, ஈரப்பதம் நிறைந்த சோலைக் காடுகளாளும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மலையில் கட்டப்பட்ட நலக்நாட் அரண்மனை உள்ளது. இது தொட்ட வீரராஜேந்திராவால் 1792ம் ஆண்டில் தன் படையினர் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது. போருக்கு செல்லும் வீரர்கள் ஓய்வெடுக்க இந்த அரண்மனை கட்டப்பட்டதாக அப்பகுதி மக்களால் இன்றளவும் நம்பபடுகிறது. சிகரத்தை அடைவதற்கு சில கிலோ மீட்டருக்கு முன்பாக பயணிகள் பாடி இக்குதப்பா எனும் கோயிலில் ஓய்வெடுக்கலாம். இது உள்ளூர்வாசிகளால் புனிதமான கோயிலாக கருதப்படுகிறது.

புகைப்பட விரும்பிகளா..?

செல்பி மற்றும் புகைப்பட கலைஞர்களாக நீங்கள் இருந்தால் இந்த இடத்தை தவற விடாதீர்கள், தடியாண்டமோல் மலை  ஒவ்வொரு புகைப்படக் கலைஞருக்கும் மகிழ்ச்சியைத் தரும். பள்ளத்தாக்குகளின் பரந்த காட்சிகள், காபி தோட்டம், பச்சை தாவரங்கள் இவை அனைத்தும் ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞருக்கு அற்புதமான பிரேம்களையும் மறக்க முடியாத எண்ணற்ற நினைவுகளையும் கொடுக்கும்.

இந்த மலை பசுமையான பள்ளத்தக்குகள் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அற்புதமான அழகு மற்றும் காலத்தின் சாட்சியாக நிற்கும் பழமையான மரங்களால் ஆச்சர்யத்தில் உறைந்து போவீர்கள். மேலும் சூரிய உதயம் மற்றும் சூர்ய அஸ்தமனத்தைக் காண இவை சிறந்த இடமாகும். 

பயர் கேம்ப் (Fire Camp) :-

தடியாண்டமோலில் கேம்ப் போடுவதற்கு சில இடங்கள் உள்ளன. ஒன்று பிக் ராக் அருகே உள்ளது, இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அடுத்து மலையின் உச்சியில்  ஒரு இடம் உள்ளது. இந்த இடம் உங்களுக்கு முழு பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை வழங்கும்.

எப்போது செல்லலாம்:-

தடியாண்டமோல் சிகரத்திற்கு பருவமழை காலத்தை தவிர ஆண்டின் எந்த நேரத்திலும் செல்லலாம். இந்த மலையில் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்