Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

இஸ்ரேல் - காசா மோதல்: இஸ்ரேல் பேச்சு வார்த்தைக்கு தயார் :-எகிப்து அறிவிப்பு...!

Bala August 08, 2022 & 16:58 [IST]
இஸ்ரேல் - காசா மோதல்: இஸ்ரேல் பேச்சு வார்த்தைக்கு தயார் :-எகிப்து  அறிவிப்பு...!Representative Image.

 

இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட பாலஸ்தீன போராளிகளுக்கிடையே சமீபத்தில் நடந்த சண்டையின் போது காசாவில் 51 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்லாமிய ஜிஹாத் என்ற பாலஸ்தீனிய இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேலிய படைகள் "பிரேக்கிங் டான் என்ற ராணுவ  நடவடிக்கையைத் தொடங்கியது. அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடத்தி ஏவுகணை தாக்குதல்களில்  27 பொதுமக்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

காசா பகுதியில் பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலை நோக்கி சுமார் 1,100 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும்,  அவற்றில் ஏறக்குறைய 200 ராக்கெட்டுகள்  இலக்குகளை தாக்கமலே கிழே விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.  பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்துடன் தொடர்புடைய சுமார் 170 இலக்குகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை நடத்தியது, அதில் மூத்த அதிகாரிகள் மற்றும் பயங்கரவாதக் குழுவின் முக்கிய ஆர்வலர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக உள்ளதாகவும், இரு தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் அமைதியை ஏற்ப்படுத்த வேண்டும் என எகிப்து தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமஸ் - இஸ்ரேல் இடையே எகிப்து முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்