சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே, பெண்தோழி ஒருவரை ஒரு தலையாய் காதலித்து வந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். இது தெரிந்த அந்த பெண்ணின் அண்ணன் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அன்புச் செழியனின் உறவினர்களும் பெண்ணின் அண்ணனை அடித்ததால், அந்தப் பெண் அவருடன் பேச மறுத்துள்ளார்.
இதனால், விரக்தியடைந்த அன்புச்செல்வன், கொக்கு மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார். பிறகு, இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…